Guru Peyarchi 2024: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை தரும் குரு பகவான்..! கார்த்திகை நட்சத்தினருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை தரும் குரு பகவான்..! கார்த்திகை நட்சத்தினருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை தரும் குரு பகவான்..! கார்த்திகை நட்சத்தினருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 11:31 PM IST

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான், கார்த்திகை நட்ச்த்தினருக்கு கொடுக்கும் பலன்களை பார்க்கலாம்

கார்த்திகை நட்சத்தினருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
கார்த்திகை நட்சத்தினருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

தனுசுக்கு ஆறாம் இடம், மீனத்துக்கு மூன்றாம் இடமாக வரும் ரிஷப ராசி, மறைவு ஸ்தானமாக இருக்கிறது.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான குரு பெயர்ச்சி

கார்த்திகை நட்சத்தரம் மேஷ நட்சத்திரம் ஒன்றாம் பாதம், ரிஷப ராசியில் 2,3 மற்றும் நான்காம் பாதத்தை கொண்டதாக உள்ளது. கார்த்திகை நட்சத்திர்ததினர் சூரிய பகவானின் அனுகலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

குருவின் சஞ்சாரம் பெறும் ரிஷப ராசியின் மூன்று பாதங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது. முதல் மூன்று மாதங்கள் சஞ்சாரிக்கும் குரு அக்டோபர் முதல் பிப்ரவரி மாத காலகட்டத்தில் நிவர்த்தி ஆகிறார்.

கடந்த காலங்களில் இருந்த மனகுழப்பம் நீங்கும். தெய்வ அனுகூலத்தால் விரயம், நஷ்டம், செலவுகள் எல்லாம் குரு பகவானால் விலகும். தடுமாற்றம் இருந்த நிலைமை மாறி நன்மை, தீமைகளை பிரித்து பார்க்கும் ஆற்றலை தருவார்.

பொருளாதார ரீதியில் எந்த பிரச்னையும் இருக்காது. வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளாமாக உருவாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செல்ல நினைத்தவர்களுக்கும் வாய்ப்புகள் அமையும்.

தாய் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை விட்டு பிரிந்து போவதற்கான சூழ்நிலையும் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள்.

எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பணி நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை கிடைக்கும். ஆன்மிகத்தில் மீது நாட்டம் அதிகரிக்கும்.

உறவுகளை பேனி காப்பாத்தில் கவனம் செலுத்துங்கள். தவறினால் சின்ன சின்ன மனகசப்புகள் ஏற்படலாம். மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நன்மை தரும்

உழைப்புக்கு ஏற்ற வருமானம்

இடம் வாங்குவதற்கான சூழல் உருவாகும். விவசாயம், உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு உழைப்பு ஏற்ற வருமானம் கிடைக்கும். திருமனம் ஆகாதவர்களுக்கும் மங்களகரமான செய்தி கிடைக்கும்.

புதிய வேலை தோடுவோருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமைவது கடினமாக இருக்கும்.

வேலையில் முழு கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அடைவீர்கள். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மூத்த சகோதரிகளால் நன்மைகள் கிடைக்கும். அரசயிலில் இருப்பவர்கள் விழப்புடன் இருக்க வேண்டும். விளையாட்டு துறையில் இருப்பவர்கள் பட்டம், பதக்கங்களை வெல்லலாம்.

திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

சிறு தொழில் தொடங்கலாம்

தொழில் தொடங்க விரும்புவோர்கள் அதை தொடங்குவதற்கான சரியான காலமாக இருக்கும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சுப கடன்களை வாங்கி செலவழிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல வளர்ச்சிகள் கிடைக்கும்.

வயிறு, குடல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மருத்துவ ரீதியிலான செலவுகள் வரும். உணவு பழக்கவழக்கங்கள் சரியான முறையில் பின்பற்றுங்கள். முருகன் வழிபாடு, தட்ஷிணாமூர்த்தி வழிபாடு தொடர்ச்சியாக செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்