Lord Mercury: புதன் பெயர்ச்சியால் கஷ்டப்பட போகும் ராசிகள்
புதன் பகவானின் இடப்பெயர்ச்சியால் சங்கடங்களை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், காதல், அறிவு, படிப்பு, பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகிறார்.
புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். தற்போது புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார் இன்று சனிபகவானின் மகர ராசியில் நுழைகின்றார்.
புதன் பகவானும் சனி பகவானும் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அதே சமயம் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
கடக ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் மூன்று மற்றும் 12 வது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக பணம் செலவழிக்க வேண்டிய வாய்ப்புகள் உருவாகும். மதிப்புமிக்க பொருட்களை இழப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பயணங்கள் செய்யும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்ம ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்களான சூழ்நிலைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வீட்டில் சங்கடங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். சிம்ம ராசிக்காரர்கள் தினமும் விஷ்ணு பகவானை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.