தமிழ் செய்திகள்  /  Astrology  /  We Will See About The Yogas And Rasis Due To The Combination Of Rahu And Mercury

Rahu and Mercury: ராகு புதன் சேர்ந்து செய்யப் போகும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 04:11 PM IST

ராகு புதன் சேர்க்கையால் யோகம் பேரும் ராசிகள் குறித்து காண்போம்.

ராகு புதன் சேர்க்கை
ராகு புதன் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகுபகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது ராகு பகவான் பயணம் செய்தவரும் மீன ராசியில் வரும் மார்ச் மாதத்தில் புதன் பகவான் நுழைகின்றார். ராகு மற்றும் புதன் சேர்க்கை 15 ஆண்டுகளுக்குப் பின் நிகழ உள்ளது. இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் சாதகமாக முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறையும். நல்ல வருமானத்திற்கான ஆதாயம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியம் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் கடன் சிக்கல்கள் விலகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் சிறப்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிபடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பெற்றோருடன் உறவு பலமாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நினைத்தபடி நிறைவேறும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.