Thai Amavasai 2025: தை அமாவாசை நாளில் இத மட்டும் தயவுசெய்து செய்யாதீங்க.. முன்னோர் கோபத்துக்கு ஆளாகாதீங்க!
Thai Amavasai 2025: தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.

Thai Amavasai 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த ஆசீர்வாதத்தை பெறக்கூடிய முக்கிய நாளாக தை அமாவாசை திருநாள் வழங்கி வருகிறது. தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு பக்கத்துணையாக இருப்பார்கள் என கருதப்படுகிறது. தை அமாவாசை திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண் வாரிசுகள் அவர்களை வழிபடுவார்கள்.
இந்த தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
துடைப்பம்
இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கானது மட்டும் கிடையாது. இன்றைய திருநாளில் முன்னோர்களை மட்டும் வழிபடும் நாளாக கருதப்படுவது கிடையாது. சனிபகவானையும் வழிபடலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக தனத்தின் நாயகியாக விளங்கக்கூடிய மகாலட்சுமியோடு தொடர்புடைய துடைப்பத்தை வீட்டில் வாங்கி இன்று வைக்கக் கூடாது. இதனால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் வரக்கூடிய வருமானம் தடைபடும் எனக் கூறப்படுகிறது.
மது அருந்துவது
தெய்வ வழிபாடு செய்யும் வீட்டில் மது அருந்துவது, அசைவம் சமைப்பது போன்ற பொருட்களை இந்த தை அமாவாசை திருநாளில் மற்றும் பௌர்ணமி நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக நமது வீட்டில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் இரட்டிப்பாக மாறும் எனக்கு கூறப்படுகிறது. மேலும் இந்த முக்கியத்துடன் நாட்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என கூறப்படுகிறது.
உணவுப் பொருட்கள்
இந்த அமாவாசை திருநாளில் நாம் வாங்கக்கூடிய அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த நாட்களில் நாம் வாங்கக்கூடிய அனைத்து முன்னோர்களுக்கு சொந்தமானதாகும். எனவே தானியங்கள் மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு படைத்தது என்ற அர்த்தத்தில் முற்படும். அதன் காரணமாக அதன் பயன்படுத்துவதன் பட்சத்தில் முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்மறை காரியங்கள் நடக்கலாம் என கூறப்படுகிறது.
எண்ணெய் பொருட்கள்
அமாவாசை திருநாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது அல்லது எண்ணெய் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு சனிபகவானால் தோஷம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
கல் உப்பு
நமது வீட்டில் இருக்கக் கூடிய கல் உப்பு மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் கல் உப்பை இந்த தை அமாவாசை திருநாளில் வாங்கினால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இந்த தை அமாவாசை திருநாளில் கல் உப்பு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
பூஜை பொருட்கள்
இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய திருநாளாக கருதப்படுகிறது. மேலும் தெய்வங்களின் வழிபாடு நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படி இந்த திருநாளில் நீங்கள் வாங்கினால் உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் வரக்கூடும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்