Sani Visha Yogam: கும்ப ராசியில் சனியால் உண்டான விஷ யோகம்.. வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
Sani Visha Yogam: கும்ப ராசியில் சனியால் உண்டான விஷ யோகத்தால் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்கப்போகும் 4 ராசிகள் குறித்துக் காண்போம்.

Sani Visha Yogam: வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகின்றன. சில நேரங்களில் கிரகங்களின் சங்கமம் சுப யோகத்தை உருவாக்குகிறது. சில நேரங்களில் அமங்கலமான யோகத்தை உருவாக்குகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
Mar 14, 2025 05:08 PMமீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
கும்பத்தில் விஷ யோகம்:
ஜூலை 23 முதல் கும்ப ராசியில் விஷ யோகம் உருவாகிறது. ஜோதிட கணக்குப்படி விஷ யோகம் கண்டிப்பாக மாதம் ஒரு முறை உருவாகும். இந்த விஷ யோகம் ஜூலை 23 முதல் 25 வரை மாலை 5 மணிக்கு நீடிக்கிறது. எந்த ராசியில் சனி இருக்கிறாரோ, அங்கு விஷ யோகம் உருவாகிறது. அதன்படி, கும்பத்தில் விஷயோகம் ஏற்பட்டுள்ளது.
விஷ யோகம் எப்படி உருவாகிறது?:
சனியும் சந்திரனும் ஒரே ராசியில் வரும்போது விஷ யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரனும் ஜூலை 23, 2024 அன்று காலை 10 மணிக்குப் பிறகு கும்ப ராசிக்குள் குடிபெயர்ந்துள்ளார்.
விஷயோகம் சில ராசிகளில் பக்கவிளைவை ஏற்படுத்தும்:
கடக ராசி: கடக ராசியின் எட்டாம் வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. விஷயோகத்தால் கடக ராசியினர், வரப்போகும் ஆண்டில் உடல்நலப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தவறான செய்திகள் கிடைக்கும். மனம் அலைபாயும். எந்த வேலையும் செய்ய மனம் வராது. வரப்போகும் ஆண்டில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வரப்போகும் ஆண்டில் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.
கன்னி ராசி: உங்கள் ராசியின் ஆறாம் வீட்டில் சனி-சந்திரன் சேர்க்கை உருவாகும். வரப்போகும் ஆண்டில் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கலாம். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, அந்நியரைப் போல நடந்து கொள்வீர்கள். விவாதம் செய்யும் சூழல் ஏற்படும். பயணம் சாத்தியம் ஆகும். ஆனால், பயணம் வேதனையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் பணியிடத்தில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்ப்பது நல்லது. விவாதங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். சனி உங்கள் நான்காம் வீட்டில் இருந்து நோய்க் கடன் வீட்டை பார்க்கிறார். இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் எதிரிகளால் கடும் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
மீன ராசி: ஆகஸ்ட் மாதத்தில், சிம்மம், கடகம்,கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட நான்கு ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சதுர்கிரஹி யோகம் மீனத்தை வளமாக்கும்.
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பயணம் செய்யும் திட்டத்தை ஒத்திவையுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணத்தை முதலீடு செய்யாதீர்கள். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்