Viruchigam : விருச்சிக ராசியினருக்கு விநாயக பெருமான் எழுதிய விதி இதுதான்.. முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை இழக்காதீங்க!-viruchigam this is the rule written by lord ganesha for scorpios do not lose friendship with good people due to anger - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Viruchigam : விருச்சிக ராசியினருக்கு விநாயக பெருமான் எழுதிய விதி இதுதான்.. முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை இழக்காதீங்க!

Viruchigam : விருச்சிக ராசியினருக்கு விநாயக பெருமான் எழுதிய விதி இதுதான்.. முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை இழக்காதீங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 28, 2024 04:04 PM IST

Viruchigam: விருச்சக ராசியினருக்கு சனி பகவான் ஏழாவது இடத்தில் அமர்கிறாரோ அப்போதெல்லாம் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்தாலும் ஓரளவு நிம்மதியை கொடுப்பார். சனி பகவான் எட்டாவது இடத்தில் வந்து அமரும்போது நீங்கள் எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் வரும்

Viruchigam : விருச்சிக ராசியினருக்கு விநாயக பெருமான் எழுதிய விதி இதுதான்.. முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை இழக்காதீங்க!
Viruchigam : விருச்சிக ராசியினருக்கு விநாயக பெருமான் எழுதிய விதி இதுதான்.. முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை இழக்காதீங்க!

உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதி கொடுக்காதீர்கள் கணவன் மனைவி இருவருக்குள்ளும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் அவர்களின் பேச்சை கேட்டு வீண் சந்தேகத்தால் வாழ்வை இழந்து விடாதீர்கள். சில நேரங்களில் நிம்மதி தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகலாம்.

மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனை கூறினாலோ அல்லது உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினாலோ விமர்சித்தாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது தான் நல்லதாக இருக்கும்.

ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

குரு பகவான் எப்போதெல்லாம் உங்களின் ஒன்பதாவது இடத்தில் வந்து அமர்கிறார்களோ அப்போதெல்லாம் தோல்வி மனப்பான்மை தலை தூக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேர பயணங்களை தவிர்க்க பாருங்கள். இது சிறு சிறு பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகளை ஏற்படுத்தும். யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து இட வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருந்தால் நலமாக இருக்கும் என்று ஆதங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது தான் இந்த காலகட்டத்தில் நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நீதிமன்றம், வழக்குகள் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க இயலாத வகையில் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.

அதிகரிக்கும் செலவுகள்

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்கக்கூடிய சூழல் இல்லாத நிலை உருவாகும் மனைவி வழி உறவினர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். சர்க்கரை நோய்க்குரிய அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அதனால் உடல் நலத்தை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியம். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் . உங்கள் ராசிக்கு நான்காவது இடத்தில் ராகு பகவானும் எட்டாம் இடத்தில் சனி பகவானும் ஒரு சேர அமர்ந்திருக்கும் போது கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும் மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பது விநாயகர் எழுதிய விதியாக உள்ளது.

முன் கோபத்தால் நல்லவர்களை நட்பை ஒருபோதும் இழந்து விடாதீர்கள் சில பல அரசு விவகாரங்களில் அலட்சிய வேண்டாம். குரு பகவான் உங்கள் விருச்சக ராசியில் சஞ்சரிக்கும் போது தொழில் விவகாரங்கள் சிறப்பாக அமையும். இருந்தாலும் பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கலாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். மன உளைச்சலும் அதிகரிக்கும். உங்கள் மீது சில வீண் பழி சுமத்த முயற்சிக்கலாம் பழைய கடன் பிரச்சினைகள் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பிரச்சனைகள் ஏற்படும் என்ற பயமும் ஏற்படலாம்.

நெருங்கி பழகிய ஒரு சிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்லவும் இந்த காலகட்டத்தில் வாய்ப்புகள் உள்ளது. சனி பகவான் உங்களின் ராசியில் மூன்றாவது வீட்டில் வந்து அமரும் போதெல்லாம் அவ்வப்போது சலிப்புணர்வு ஏற்படும். சோர்வுகள் ஏற்படலாம். திடீர் பண வரவும் உண்டாகலாம். வாகனம் வாங்க கூடிய யோகம் உருவாகும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும். எப்போதெல்லாம் சனி பகவான் வக்கிர இருக்கிறாரோ அப்போதெல்லாம் பழைய சிக்கல்கள் தீரும். தள்ளிப்போன விஷயங்கள் முடிவடையும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட வாய்ப்புகள் உள்ளது. வங்கி கடன் உதவி கிடைக்கும்.

சனிபகவான் இரண்டாவது வீட்டை பார்க்கும்போது சாமர்த்தியமாக பேசுகிறீர்கள் சில நேரங்களில் நீங்கள் சாதாரணமாக பேசுவதைக் கூட சில தவறாக புரிந்து கொள்ள நேரிடும். தன்னை ஏமாற்றுவதாகவும் நீங்க நினைக்கலாம். பூர்வீக சொத்தை போராடி பெறக்கூடிய காலகட்டமாக இது உள்ளது. பிறமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் அதிர்ஷ்டங்கள் உருவாகலாம்.

வியாபாரத்தில் போட்டி

ராகு பகவான் கேது பகவான் ஒருசேர அமரும் போது வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும். இழப்புகள் ஏற்படலாம் திடீரென அறிமுகம் ஆகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகளை செய்வது நல்லதல்ல. முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாட்கள் விடுப்பில் செல்லலாம். இதனால் பல வேலைகளை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும் திருமணமாகாத விருச்சக ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களை தள்ளி வைத்துவிட்டு கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்துவது நல்லது சமூக வலைதளங்களை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது சனி பகவானால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த ராசிக்கு குருபகவான் ஆறாவது இடத்திலும் சனி பகவான் ஏழாவது இடத்திலும் வந்து அமரும் போது உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும் அதிரடியான யோகங்களையும் இன்ப அதிர்ச்சிகளையும் பணவரவையும் குரு பகவான் உங்களுக்கு அள்ளித் தருவார் என்பது விநாயகப் பெருமான் எழுதிய விதி என்று சொல்லலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

டாபிக்ஸ்