Viruchigam: விருச்சிக ராசியினரே விளையாட்டா பேசாதீங்க.. வினை வரலாம்.. 2025க்குள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க
Viruchigam: உங்கள் பழைய கடன்களை தீர்க்கும் காலகட்டம் இது. குறைந்த வட்டியில் லோன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்க போகும் காலகட்டம் இது. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உண்டு.
Viruchigam: எடுத்த காரியங்களை விரைந்து முடிக்கும் வல்லமை பெற்றவர்கள் விருச்சிக ராசியினர். 2025 ம் ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு என்ன மாதிரியான சுப மற்றும் அசுப பலன்கள் காத்திருக்கிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். விருச்சிக ராசியின் யோகாதிபதியான குரு பகவான் மிகப் பெரும் நன்மைகளை அள்ளித் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும் சுக்கிர பகவான் பல நன்மைகளை தருவார் குடும்பத்தின் சந்தோசம் அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் சேரும் சூழல் உருவாகும். தொடர்ச்சியாக தள்ளிப்போன திருமணங்கள் உடனடியாக நடந்து முடியும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம் இது. குலதெய்வ கோயிலை புதுப்பிக்க உங்களால் இயன்ற அளவு பணம் கொடுத்து உதவுவீர்கள்.
முக்கிய முடிவுகளுக்கு வாய்ப்பு
உங்கள் பழைய கடன்களை தீர்க்கும் காலகட்டம் இது. குறைந்த வட்டியில் லோன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்க போகும் காலகட்டம் இது. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய சொத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் இவர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது. தந்தையாரின் உடல்நிலை சீராக இருக்கும். சின்ன சின்ன கருத்து மோதல்கள் குடும்பத்தில் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்தில் குரு பகவான் விரைய வீட்டிற்கு வந்து சொல்வதால் சில அனாவசிய செலவுகள் ஏற்படும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய ஆதாரங்கள் இன்றி பணம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் சின்ன சின்ன அலைச்சல்கள் ஏற்படலாம். வீடு கட்டுவது வாகனம் வாங்குவது போன்ற சுக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கு பணி உயர்வு உள்ளிட்ட சிறந்த பலன் காத்திருக்கிறது. ஆவணி புரட்டாசி மாதங்களில் லாபமும் திடீர் யோகமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு முதல் பல நன்மைகள் காத்திருக்கிறது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அருமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபடுங்கள். சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மைகளை கொண்டு வரும்.
நல்லதே நடக்கும்
இந்த காலகட்டத்தில் நீங்கள் விளையாட்டாக செய்யக்கூடிய காரியம் விபரீதத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் லாபம் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதானமாக யோசித்து முடிவுகளை எடுங்கள். அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பது சிக்கலை ஏற்படுத்தும். வாகனங்களை இயக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தை மாசி பங்குனி மாதங்களில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பாதியிலே நின்ற பல வேலைகளை வேக வேகமாக செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் வெற்றியும் வந்து சேரும் வியாபாரத்தில் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரச்சனை நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் 2025 முடிவதற்குள் எல்லாம் உங்களுக்கு நல்லதே நடக்கும் இலாபத்தை பெருக்க வாய்ப்புகள் உள்ளது. வாய்ப்புகள் கிடைக்கும் போது கோயிலுக்கு சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்