Astrology Tips: கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? - இந்த பரிகாரத்தை 5 நாட்கள் ட்ரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrology Tips: கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? - இந்த பரிகாரத்தை 5 நாட்கள் ட்ரை பண்ணுங்க!

Astrology Tips: கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? - இந்த பரிகாரத்தை 5 நாட்கள் ட்ரை பண்ணுங்க!

Karthikeyan S HT Tamil
Aug 24, 2023 05:20 PM IST

விநாயகரை வேண்டி தேங்காய் உடைப்பதன் மூலம் தேங்காய் எப்படி சிதறுகிறதோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்களும் சிதறிவிடும் என்பதே விநாயகருக்கு சிதறு காய் உடைப்பதன் நோக்கமாகும்.

விநாயகர், சிதறுகாய்
விநாயகர், சிதறுகாய்

நமக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களுக்கு நம்முடைய கர்ம வினைகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. எனினும் அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு நல்ல நிலைமைக்கு வருவதற்காக நாம் வழிபட வேண்டிய தெய்வமாக கருதப்படுபவர் விநாயகர். எனவே தான் அவரை சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர விநாயகர் என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட விநாயகர் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டிற்கு மொத்தம் 15 தேங்காய்கள் தேவைப்படும். 

மொத்தம் 15 தேங்காய்களை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கும் கிழமை திங்கட்கிழமையாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். முதல் நாள் ஒரு தேங்காயும், இரண்டாவது நாள் 2 தேங்காயும், மூன்றாவது நாள் 3 தேங்காயும், நான்காவது நாள் 4 தேங்காயும், ஐந்தாவது நாள் ஐந்து தேங்காயும் வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

திங்கட்கிழமை அன்று காலை நீராடி, வீட்டு பூஜை அறையில் பூஜை செய்த பிறகு ஒரு தேங்காயை எடுத்து நம் தலையை 3 முறை சுற்ற வேண்டும். பிறகு அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று விநாயகரின் பாதத்தில் அந்த தேங்காயை வைத்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த தேங்காயை எடுத்து வந்து சிதறு காயாக உடைக்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்ப வேண்டும்.

அடுத்தநாளும் இதேபோல் இரண்டு தேங்காயை எடுத்து ஒவ்வொரு தேங்காயையும் 3 முறை தலையை சுற்றி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் அந்த தேங்காய்களை சிதறு காயாக உடைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்களும் நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஐந்தாவது நாள் அருகம்புல் மாலை சாத்தி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவ்வாறு விநாயகரை வேண்டி தேங்காய் உடைப்பதன் மூலம் தேங்காய் எப்படி சிதறுகிறதோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்களும், துன்பங்களும் தூள் தூளாக சிதறிவிடும் என்பதே விநாயகருக்கு சிதறு காய் உடைப்பதன் நோக்கமாகும். மேற்கண்ட பரிகாரத்தை செய்வதன் மூலம் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என்பது நம்பிக்கை..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்