தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bhagavan Luck: தினம் தினம் ரணம்.. திருமண கோல சனி கொடுக்கும் உச்ச நிவாரணம்.. எந்த கோயில் தெரியுமா?

Sani Bhagavan Luck: தினம் தினம் ரணம்.. திருமண கோல சனி கொடுக்கும் உச்ச நிவாரணம்.. எந்த கோயில் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2024 08:18 PM IST

Sani Bhagavan Luck: இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தில் சனிபகவான் திருமணக்கோலத்தில், தெற்கு நோக்கி தன்னுடைய இரு மனைவிகளோடு, அனுகிரகமாக இருக்கிறார். - திருமண கோல சனி கொடுக்கும் நிவாரணம்!

Sani Bhagavan Luck: தினம் தினம் ரணம்.. திருமண கோல சனி கொடுக்கும் உச்ச நிவாரணம்.. எந்த கோயில் தெரியுமா?
Sani Bhagavan Luck: தினம் தினம் ரணம்.. திருமண கோல சனி கொடுக்கும் உச்ச நிவாரணம்.. எந்த கோயில் தெரியுமா?

Sani Bhagavan Luck: சனீஸ்வரன் பிடியில் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் அன்பர்கள் செல்ல வேண்டிய முக்கியமான கோயில் பற்றி அவிநாசி ஜோதிலிங்கம் பேசி இருக்கிறார். 

கல்யாண தடை கொடுக்கும் சனீஸ்வரன் 

இது குறித்து அவர் பேசும் போது, “ சனீஸ்வரன் என்றாலே, எல்லோருக்கும் பயங்கர பயம் மற்றும் ஒரு விதமான மன அழுத்தம் என்பது இயல்பாகவே வந்து விடும். லக்னத்தில், 7, 5, 2 ஆகிய இடங்களில் சனிபகவான் இருந்தால், கல்யாணத்தை தாமதப்படுத்துவார். சனி எப்போதுமே கல்யாணத்தை தாமதப்படுத்துவாரே, தவிர தடை செய்யமாட்டார். அது மட்டுமல்ல, அதனுடன் தொழில்தடை, மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் வந்து விடும். 

சனீஸ்வரன் 6.8.12 ஆகிய இடங்களில் மறையும் போது, தொழில் தடையானது உருவாகும். 12ம் இடத்தில் சனி பகவான் இருக்கும் போது, தூக்கம் கூட வராமல் படாதபாடுபடுவர். இவர்கள் சனி பகவான் சம்பந்தமான பல கோயில்களுக்கு சென்று இருந்தாலும், இப்போது குறிப்பிடுகிற கோயிலுக்கு சென்று வழிபட்டால், மிகப்பெரிய விமோசனம் கிடைக்கும். 

அட்சயபுரீஸ்வரர் கோயில்

குறிப்பாக பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள், கண்டிப்பாக அந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அந்த கோயில், தஞ்சாவூர் மாவட்டம், விளங்குளத்தில் இருக்கக்கூடிய அட்சயபுரீஸ்வரர் கோயில்தான். அந்த கோயிலுக்கு பூசம் நட்சத்திரத்தினத்தன்றோ, அல்லது சனிக்கிழமையோ செல்லலாம்.

இந்தக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தில் சனிபகவான் திருமணக்கோலத்தில், தெற்கு நோக்கி தன்னுடைய இரு மனைவிகளோடு, அனுகிரகமாக இருக்கிறார். ஆகையால் அங்கு சென்று சனிபகவானை வழிபடும் பட்சத்தில், பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கும்” என்று பேசினார்.  

ஜென்ம சனி செல்ல வேண்டிய கோயில் 

ஜென்ம சனியால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் கும்பராசிக்காரர்களே, எவ்வளவு பரிகாரம் செய்தும், எதுவுமே கை கொடுக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறீர்களா? எவ்வளவோ கோயில்களுக்கு சென்ற பின்னரும், முடியாதோருக்கு அன்னதானம் உதவிகள் வழங்கிய பின்னரும், பாதிப்பு இன்னும் அடங்கவில்லையா? இவையெல்லாம் ஜென்ம சனியின் பாதிப்புகள்தான்.

நீங்கள் மேல் கூறியவற்றையெல்லாம் செய்த காரணத்தினால்தான், தற்போது தப்பித்துக்கொண்டு இருக்கிறீர்கள், இல்லையென்றால், நீங்கள் இன்னும் வேதனையில் சிக்கித்தவிக்க வேண்டிய சூழ்நிலை வாய்த்து விடும். கும்பம் இயல்பிலேயே மிகவும் நல்ல ராசி. அனைவரிடத்திலும் மரியாதையை எதிர்பார்க்கும். ஊருக்கெல்லாம் உழைக்கும். ஆனால் தன்னைப்பார்த்துக்கொள்ளாது.

கும்ப ராசியில் உச்சம் அடையக்கூடிய கிரகமும் இல்லை. நீச்சம் அடையக்கூடிய கிரகமும் இல்லை. ஆகையால், வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பது ரீதியாக, சராசரியாக வாழ்க்கை சென்று கொண்டே இருக்கும். அதனுடன் தற்போது ஜென்ம சனியும் சேர்ந்து இருக்கிறது. ஆகையால் வாழ்க்கையே ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது.

இதற்கு தீர்வு இருக்கிறதா எனபதுதான் தற்போது பெரும்பான்மையானோரின் கேள்வியாக இருக்கிறது. ஆம், தீர்வு இருக்கிறது. கும்பகோணத்தின் நகர் மத்தியில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள் மூன்றே கோயில்கள்தான். சனிக்கிழமையன்று அங்கு இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: