தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vibareetha Rajayogam: அடி தூள்! 6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்! இனி எல்லாமே வெற்றிதான்!

Vibareetha Rajayogam: அடி தூள்! 6ம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம்! இனி எல்லாமே வெற்றிதான்!

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 07:10 PM IST

Vibareetha Rajayogam: உங்களுக்கு 5, 8 மற்றும் 10 ஆம் இடத்தின் அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார். 8ஆம் இடத்திற்கு உரியவர் யோககாரகன் சுக்கிரன் உடன் இணைந்து இருப்பது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி தரும்.

அடி தூள்! 6ஆம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம் ராசி! இனி எல்லாமே வெற்றிதான்!
அடி தூள்! 6ஆம் இடத்தில் 3 கிரக சேர்க்கை! விபரீத ராஜயோகம் பெறும் மகரம் ராசி! இனி எல்லாமே வெற்றிதான்!

வரும் ஜூன் 15ஆம் தேதி அதிகாலை சூரிய பகவான் மிதுனம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதன் மூலம் சூரியன் உடன் புதன், சுக்கிரன் சேர்க்கை ஏற்படும். மகர ராசிக்கு 6ஆம் இடமாக உள்ள மிதுனம் ராசியின் அதிபதியாக புதன் பகவான் உள்ளார். மறைவு ஸ்தானம் ஆன 6ஆம் இடம் உள்ளது. வியாபாரம், தொழிலில் மகரத்திற்கு பாக்கியம், புகழை அள்ளித்தரும் இடமாக  புதன் பகவான் உள்ளார். 

 வெற்றிகளை தரும் 3 கிரக சேர்க்கை 

ஜீவனம் சார்ந்த பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் லட்சுமி கடாட்சம் ஏற்பட வேண்டியது அவசியம். முகப்பொலிவு இதற்கு மிக முக்கியம் ஆகும். வசீகர தோற்றம் ஒருவருக்கு வெற்றித்தரும் என்பதால் இந்த மூன்று கிரக சேர்க்கை வெற்றிகளை அள்ளித்தர போகிறது. உங்கள் முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான் மற்றும் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றிகளை கிடைக்க செய்யும்.