அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க வரும் சுக்கிரன்.. திடீர் பணவரவு, நிதி ஆதாயம்.. நன்மை பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க வரும் சுக்கிரன்.. திடீர் பணவரவு, நிதி ஆதாயம்.. நன்மை பெறப்போகும் ராசிகள்

அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க வரும் சுக்கிரன்.. திடீர் பணவரவு, நிதி ஆதாயம்.. நன்மை பெறப்போகும் ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 02, 2025 06:30 PM IST

சுக்கிரன் தனது ராசியை மாற்றும்போது, ​​12 ராசிகளிலும் சாதகமான அல்லது பாதகமான விளைவை ஏற்படுத்துகிறார். ஜூலை மாதம் மிதுன ராசியில் சுக்கிரன் நுழையப் போகிறார். சுக்கிரனின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்

அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க வரும் சுக்கிரன்.. திடீர் பணவரவு, நிதி ஆதாயம்.. நன்மை பெறப்போகும் ராசிகள்
அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க வரும் சுக்கிரன்.. திடீர் பணவரவு, நிதி ஆதாயம்.. நன்மை பெறப்போகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

கடந்த ஜூன் மாத இறுதியில் சுக்கிரன் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் சஞ்சாரம் அடைந்தார். இதைத்தொர்ந்து அடுத்ததாக இந்த மாத இறுதியில் மிதுன ராசியில் சஞ்சாரிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தின் போது சுக்கிரன் வியாழனுடன் இணைந்து இருப்பார். செல்வத்தின் காரணியான சுக்கிரனின் மிதுன ராசி சஞ்சாரம் ஜூலை 26 அன்று காலை 09:02 மணிக்கு நடைபெறுகிறது.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும் தாக்கம் ஏற்படும். ஆனால் சில அதிர்ஷ்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

சுக்கிரனின் மிதுன ராசி சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வளர்ச்சியுடன், நிதி நன்மைகளையும் பெறலாம். சில ஆடம்பரங்களை பெற்று பணக்காரர் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சுபமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில வேலைகளும் நடக்கும். உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் வலுவடையும். தொழில் ரீதியாக இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவுகள் இணக்கமாக இருப்பார்கள். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வணிக ரீதியாக இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டவசமாக, தடைபட்ட வேலைகள் முடிவடையும். திடீர் பண ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களும் இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்களை பெறலாம். இது வர்த்தகம் மற்றும் தொழில்முனைவோருக்கு நல்ல நேரமாக அமையும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். நிதி ரீதியாக, இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பண ஆதாயத்துக்கான அறிகுறிகள் உள்ளன.

காதல் உறவுகள் மேம்படும். தொழில் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். கலை மற்றும் இலக்கிய துறையில் இருப்பவர்களுக்கு வெற்றியை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு நேர்மறையான பலன்களை பெறுவீர்கள்.

பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.