Venus Transit 2024: சுக்கிரன் பெயர்ச்சியால் நாளை முதல் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!
சுக்கிர பகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது. சுக்கிரனின் இந்த மாற்றத்தால் எந்த மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிர பகவான் காதல், திருமணம், அழகு மற்றும் வசதிக்கான கிரகமாக கருதப்படுகிறது. ஒரு ராசியில் சுக்கிரன் வலுவாக இருந்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மங்களகரமானவராக கருதப்படும் சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜனவரி 18 ஆம் தேதி இடப்பெயர்ச்சி ஆகிறார். இவரின் சஞ்சாரம் காரணமாக திருமண வரன் அமைதல், பொன், பொருள் சேர்க்கை, வசதியான வாழ்க்கை அமைதல், தாம்பத்திய சுகம் கிடைப்பது என வகையில் நற்பலன்களை பெற உள்ள ராசிகள் யார் யார் என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு சுக்கிரனின் இந்த சஞ்சாரம் பல வகைகளில் நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையும். அமைதியும், மகிழ்சிகரமான சூழல் உங்கள் வீட்டில் நிலவும். உங்கள் உழைப்பிற்கான முழுபலனையும் பெறுவீர்கள். காதல் விஷயத்தில் ஒற்றுமை மேம்படும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கடகம்
எதையும் தாங்கும் வலிமை கொண்ட கடக ராசி அன்பர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமான பலனைத் தரக்கூடியதாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். காதல் வாழ்க்கையில் ஈர்ப்பும், இல்லற வாழ்க்கையில் நெருக்கமும் அதிகரிக்கும். சிறு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். அது மன அமைதியும், லாபத்தையும் பெற்றுத் தரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும். தொழில், வியாபார ரீதியாக நிதி நிலை முன்னேற்றம் அடையும்.
மகரம்
மகர ராசிக்கு விரய ஸ்தானத்தில் சுக்கிரனின சஞ்சாரம் நடக்க உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது அவசியம். முதலீடுகள் மூலம் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். ஏதேனும் ஒருவகையில் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்