Lakshmi Narayana Yogam: தனுசு ராசியில் சஞ்சாரம் அடையும் சுக்கிரன்! யோகம் பெறப்போகும் ராசிகள்
ஜனவரி 18 முதல் சுக்கிரன் தனுசு ராசிக்குள் பிரேவேசம் அடைகிறார். இந்த இணைப்பால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்.
சுக்கிரன் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக இருந்து வருகிறது. சுக்கிரனும் புதனும் இணைவதால் அற்புதமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த சேர்க்கையினால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுப யோகம் கிடைக்கும். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் அடைவதால் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
மேஷம்
புதிய வருமானம் பெறுவதற்கான வழிகள் உருவாகும். பண வரவும் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நிகழும். திருமண வாழ்வில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல்நிலை அதிகரிக்கும். தொண்டு நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சுக்கிரன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைத் தரும். சமூகத்தில் மரியாதை கூடும். அரசியலில் இருப்பவர்களின் மனதில் குழப்பம் ஏற்படும். இனம் புரியாத பயம் உண்டாகும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
கடகம்
பொருளாதார நிலை வலுப்பெறும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இனம் தெரியாத பயம் வந்து போகும். கடினமாக உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
சிம்மம்
பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகமாக இருப்பார்கள். வீட்டில் அறப்பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக உள்ளது.
கன்னி
உறவினர்களின் ஆதரவு இருக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
பேச்சில் இனிமை வெளிப்படுத்தி மற்றவர்களை ஈர்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். செல்வம் பெருகும். மாணவர்கள் தேர்வில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நெருக்கமானவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப வேண்டாம்.
விருச்சிகம்
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி பிரச்னை தீரலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்ய வேண்டாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
தனுசு
வாழ்வில் ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள். பணி பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. அதே சமயம் அழுத்தமும் அதிகரிக்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் எண்ணங்களை யாரிடமும் விவாதிக்க வேண்டாம்
மகரம்
நிதி விஷயங்களில் சிரமங்கள் இருக்கும். திருமண வாழ்வில் பிரச்னைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சட்ட விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரம்.
மீனம்
பொருளாதாரம் வளமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். சமூகத்தில் மரியாதை கூடும்
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9