தமிழ் செய்திகள்  /  Astrology  /  Venus Enters Guru Bhagavan Rasi Meena Rasi Last March 31st

உஷாரய்யா உஷாரு..சுக்கிரப் பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு தர்ம அடி.. பிரச்னைகள் தேடி வருகின்றது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 12:01 PM IST

சுக்கிரன் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குருபகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரன் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குருபகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவருடைய இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்தாலும் ஒரு சில ராசிகள் சிக்களை சந்திக்க போகின்றனர். தொழில் மற்றும் பணரீதியாக சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் நெருக்கமான உறவுகளால் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சூழ்நிலைகளில் அவமானங்கள் உங்களை தேடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் பழியை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் இழப்பை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையின் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை செலவழிக்க அதிக முயற்சி செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel