வட சாவித்திரி விரதம் 2025: தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பது எப்படி? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வட சாவித்திரி விரதம் 2025: தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பது எப்படி? - விபரம் இதோ!

வட சாவித்திரி விரதம் 2025: தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பது எப்படி? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 14, 2025 04:29 PM IST

திருமணமான பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்தால், எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதேநேரம், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து, வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கைகூடும்.

வட சாவித்திரி விரதம் 2025: தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பது எப்படி? - விபரம் இதோ!
வட சாவித்திரி விரதம் 2025: தீர்க்க சுமங்கலி வரம் அருளும் வட சாவித்திரி விரதம் கடைபிடிப்பது எப்படி? - விபரம் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

வடம் என்றால் விழுது என்று பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. நல்ல கணவன் அமையவும், மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

வட சாவித்திரி விரதம் திருமணமான பெண்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமான பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்தால், எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதேநேரம், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து, வழிபடுவதால் விரைவில் திருமண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை.

சாவித்திரி விரதம் எப்போது?

இந்த ஆண்டு வட சாவித்திரி விரதம் மே 26, திங்கள் கிழமை அனுஷ்டிக்கப்படும். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை நோக்கி அர்ப்பணிக்கப்பட்ட இந்த விரதத்தின் போது, பெண்கள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை மட்டுமல்லாமல், முழு சடங்குகளுடன் வட அல்லது ஆலமரத்திற்கும் வழிபாடு செய்கிறார்கள்.

வட சவித்திரி விரத நாளில், அனைத்து விதிகளையும் பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும். முதலில், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வீட்டின் முன் உள்ள வட மரத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். வட சவித்திரி விரத நாளில், வட மரத்திற்கு வழிபாடு செய்து, அதில் பால் மற்றும் தண்ணீர் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் வட மரத்தை 21 அல்லது 51 முறை பிரதட்சணம் செய்யுங்கள்.

பிரதட்சணம் முடிந்ததும், வட மரத்தின் அடியில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். பின்னர், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை தியானித்து, மனதில் 108 முறை சிவ மந்திரத்தை சொல்லவும். இந்த விரதத்தை கடைபிடித்து வழிபடுவதன் மூலம் கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்கும் என்பதும் கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்