தமிழ் செய்திகள்  /  Astrology  /  Vastu Tips: Where To Place Animal Idols At Home. See What Vastu Shastra Is Going For

Vastu Tips : விலங்கு சிலைகளை வீட்டில் வைக்கலாமா வாஸ்து சாஸ்திரம் என்ன செல்கிறது பாருங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 02, 2024 03:53 PM IST

Vasty Shastra: சில விலங்குகளின் சிலைகளை வீட்டில் வைத்தால் ஏராளமான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா. வாஸ்து படி எந்த விலங்குகளின் சிலைகளை வைப்பது சரியல்ல என வாஸ்து நிபுணர்கள் சொல்கின்றனர் என்பதை இங்கு பார்க்கலாம்.

கோமாதா சிலைகள்
கோமாதா சிலைகள் (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் எந்த விலங்குகளின் பொம்மைகளை வீட்டில் எங்கு வைக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா. சில விலங்குகளின் சிலைகளை வீட்டில் வைத்தால் ஏராளமான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா. வாஸ்து படி எந்த விலங்குகளின் சிலைகளை வைப்பது சரியல்ல என வாஸ்து நிபுணர்கள் சொல்கின்றனர் என்பதை இங்கு பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு மிருகமும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதனால்தான் நாம் வீட்டில் வைத்திருக்கும் மிருக சிலைகள் நம்மை பாதிக்கின்றன. வீட்டில் சில விலங்குகளின் சிலைகள் இருந்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்க கூடும். இதனால் உங்கள் வீட்டின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆனால் வாஸ்து படி வீட்டில் எந்தெந்த விலங்குகளின் உருவங்கள் வைத்துக்கொள்வது மங்களகரமானது என என்று தெரியுமா?

யானை

நல்லிணக்கத்தின் சின்னம் யானை. ஒரு ஜோடி யானை பொம்மைகளை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இந்த சிலையை வாங்கி வைப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாஸ்து படி வெள்ளி அல்லது பித்தளை யானை சிலைகளை வீட்டில் வைக்கலாம்.

ஆமை

விஷ்ணு பகவானின் வடிவம் ஆமை. விஷ்ணு பகவான் பாற்கடலைக் கலக்கும்போது உலகைக் காக்க கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஷமூர்த்தி ஆமை வடிவில் இருக்கும் ஒரே கோவில் ஸ்ரீகூர்மன். வீட்டில் ஆமை சிலை இருப்பதால் லட்சுமி தேவியின் அருள் குடும்பத்தில் இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் இங்கு ஆமை சிலை வைப்பதற்கு திசை மிகவும் முக்கியமானது. வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஆமை சிலை வைப்பதால் வீட்டில் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை

மீன்

தண்ணீரில் உள்ள மீன் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இரண்டு மீன்கள் கொண்ட பொம்மையை வீட்டில் வைத்திருந்தால் செல்வத்திற்கு பஞ்சம் வராது என்பது நம்பிக்கை. இது சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. பித்தளை அல்லது வெள்ளி மீன் சிலைகளை வீட்டில் வைக்கலாம். இது வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கப்பட்டால், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகமாக இருக்கும்.

மாடு

இந்துக்கள் கோமாதாவை மிகவும் புனிதமாக வழிபடுகின்றனர். புராணங்களின்படி, அனைத்து தெய்வங்களும் பசுவில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் வீட்டிற்கு வரும் பசுவை உணவுடன் அனுப்ப வேண்டும். பசுவின் வால் வணங்கப்படுகிறது. பசுவின் சிலையை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.

ஒட்டகம்

ஒட்டகம் போரில் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் ஒட்டகச் சிலை இருந்தால் நீங்க செய்யும் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஒட்டகத்தின் வடமேற்கு திசையில் வரைதல் வணிகத்தில் சிறப்பாகச் செயல்பட உதவும். தொழிலில் நல்ல சாதனைகள் பதிவு செய்யப்படும்.

ஆனாலும் வீட்டில் புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளின் சிலைகளை வைக்கக் கூடாது. வீட்டிற்கு கேடு என்கிறது வாஸ்து சாஸ்திரம். இவை வன்முறையின் சின்னங்களாக கருதப்படுகிறது. இதனால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.