Vastu Sastra: வீட்டில் கருப்பு எறும்பு வந்தால் இத்தனை நன்மைகளா? சிவப்பு எறும்பு வந்தால் அர்த்தம் என்ன?
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி சில உயிரினங்கள் நன்மையும், சிலவற்றை காண்பதால் தீய அறிகுறிகள் ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதன்படி வீட்டில் சிவப்பு எறும்புகள் வந்தால் பிரச்னைகள் வர இருக்கிறது என்பதும், கருப்பு எறும்புகள் வந்தால் நல்ல அறிகுறி என்றும் நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் காலை முதல் மாலை வரை நாம் பார்க்கும் சில விஷயங்கள், நமக்கும் நடக்கும் சில நிகழ்வுகள் எதிர்காலத்தை குறிக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நிரம்பியிருக்கும் முழு குடத்தை பார்ப்பது, நரியை பார்ப்பது நன்மை எனவும், தண்ணீர் இல்லாத காலி குடத்தை காண்பது, பூனையை பார்ப்பது தீமையை குறிக்கும் எனவும் நம்பிக்கை இருந்து வருகிறது.
அதேபோல சில விலங்குகள் மற்றும் பறவைகள் தோன்றி வீட்டின் அருகே வந்தால் அதனால் மங்களகரமான விஷயமோ அல்லது தீமை நிகழ இருப்பதையோ குறிப்பதாக நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் கருப்பு எறும்புகளைக் கண்டால் அது நல்லது என்றும், சிவப்பு எறும்புகளைக் கண்டால் பிரச்னை ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. சிவப்பு எறும்புகள் கடிக்கு குணம் கொண்டவையாக இருக்கிறது, ஆனால் கருப்பு எறும்புகள் கடிக்காது. எனவே கருப்பு எறும்பு எப்போதும் மங்களகரமானதும என கருதப்படுகிறது. அதன்படி வீட்டின் எந்த பகுதியிலும் கருப்பு எறும்பு தென்பட்டால் பணம் புழங்கும் என்பது நம்பிக்கை.
கருப்பு எறும்புகளை கண்டால் என்ன அர்த்தம்?
வீட்டில் கருப்பு எறும்புகள் திடீரென தோன்றினால் அது மிகவும் சுபமான விஷயமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் கருப்பு எறும்புகள் தோன்றினால், உங்கள் வாழ்க்கையில் சோகம் மறைந்து மகிழ்ச்சியான நேரம் வர இருக்கிறது என்று அர்த்தமாக உள்ளது.
உங்களின் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலை முன்னேற்றம் அடையும் எனவும், வருமானத்தில் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது.
எனவே வீட்டில் கருப்பு எறும்பு தோன்றினால் அதற்கு சர்க்கரை அல்லது வெல்லம் இறையாக அளித்து அதன் வருகையை பெருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் கருப்பு எறும்புகள் தோன்றினால், நீங்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள் என்று அர்த்தம்.
மேற்கு திசையில் இருந்து கருப்பு எறும்புகள் வந்தால், நீங்கள் விரைவில் தொலைதூர நகரத்துக்கு பயணிப்பீர்கள் என்று அர்த்தம்.
வடக்கு திசையில் இருந்து கருப்பு எறும்பு வீட்டுக்கு வந்தால், பண வரவு மற்றும் நிதி சிக்கல்கள் தீரும். தங்கம் வைக்கும் இடத்தில் கருப்பு எறும்புகளைக் கண்டால், விரைவில் புதிய நகைகள் வாங்குவார்கள் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவப்பு எறும்புகளைப் பார்ப்பதன் அறிகுறி என்ன?
சிவப்பு எறும்புகள் தோன்றுவது பொதுவாக அமங்களமாக கருதப்படுகிறது. சிவப்பு எறும்பு கூட்டின் அருகே சென்றால், அவ்வளவுதான். அவை கடிக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த எறும்பு கடியின் வலியிலிருந்து குணமடைய நீண்ட நேரம் எடுக்கும்.
மேலும், வீட்டில் சிவப்பு எறும்புகள் கூடு இருப்பதைக் கண்டால், அது அவ்வளவு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. வீட்டில் சிவப்பு எறும்புகள் திடீரென தோன்றுவதும் தீமை ஏற்பட இருப்பதை குறிக்கின்றன. பண இழப்பு, கடன் வாங்கும் சூழ்நிலைக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சிவப்பு எறும்புகள் தோன்றினால் பண பிரச்னையானது அதிகரிக்கும்.
சிவப்பு எறும்புகள் வீட்டில் மீண்டும் மீண்டும் தோன்றினால், பணத்தை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்பட இருப்பதையும் குறிக்கும் விதமாக சிவப்பு எறும்புகள் தோன்றும் என கூறப்படுகிறது. சிவப்பு எறும்புகள் வராமல் இருக்க கிராம்பு, எலுமிச்சை, கற்பூரம் ஆகியவற்றை வீட்டில் பகுதிகளில் சிதறி வைக்கலாம்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்