Vastu tips : 'உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருக வேண்டுமா' வாஸ்து நிபுணர்கள் தரும் டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips : 'உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருக வேண்டுமா' வாஸ்து நிபுணர்கள் தரும் டிப்ஸ்!

Vastu tips : 'உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருக வேண்டுமா' வாஸ்து நிபுணர்கள் தரும் டிப்ஸ்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 30, 2025 08:55 PM IST

Vastu Tips : எப்போதும் வாஸ்து விதிப்படி வீடு இருப்பதை உறுதி செய்வதால் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாஸ்து தோஷங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை தடுக்கலாம். இங்கு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க வாஸ்து நிபுணர்கள் தரும் டிப்ஸ்களை பார்க்கலாம்.

Vastu Tips : உங்க வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக வேண்டுமா.. இந்த விஷயங்களையும் கவனிங்க.. வாஸ்து டிப்ஸ் இதோ!
Vastu Tips : உங்க வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக வேண்டுமா.. இந்த விஷயங்களையும் கவனிங்க.. வாஸ்து டிப்ஸ் இதோ! (pexels)

வாஸ்து தோஷங்களின் முக்கிய காரணங்கள்

வாஸ்து விதிகளுக்கு எதிராக வீடு கட்டப்படும்போது அல்லது அமைக்கப்படும்போது வாஸ்து தோஷங்கள் ஏற்படுகின்றன என நம்பப்படுகிறது. அதற்கான காரணங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

1. வீட்டின் பிரதான நுழைவாயில்

பிரதான நுழைவாயில் என்பது நம் வீட்டிற்கு ஆற்றல் நுழையும் முக்கிய புள்ளியாகும். அது சரியான கட்டத்தில் இல்லாவிட்டால் எதிர்மறை ஆற்றல் பரவும் என நம்பப்படுகிறது.

2. சமையல் அறை

சமையலறை சரியான திசையில் இல்லாவிட்டால் அது வீட்டில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும். சமையலறை தென்கிழக்கு நோக்கி இருந்தால் நல்லது என்று கூறப்படுகிறது.

3. கழிப்பறைகள்

வீட்டில் உள்ள கழிப்பறைகளின் முறையற்ற நோக்குநிலை வாஸ்து தோஷத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

4. சரியான வடிவம்

அரை நிலவு, முக்கோண அல்லது சீரற்ற அடுக்குகளில் கட்டப்பட்ட வீட்டில் வாஸ்து தோஷங்கள் இருக்கலாம்.

5. உடைந்த பொருட்கள்

வீட்டில் உடைந்த பொருட்கள் இருக்கக்கூடாது. உடைந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. நேர்மறை ஆற்றலை வெளியேற்றுகிறது.

வாஸ்து தோஷங்களின் விளைவுகள் என்ன?

  1. குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  2. உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
  3. நிதி சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  4. தொழில் அல்லது படிப்பில் தடைகள் மற்றும் சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகலாம்.
  5. உறவில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

வீட்டிற்கு நல்ல ஆற்றலை எவ்வாறு கொண்டு வருவது?

  1. வாஸ்து தோஷங்களில் இருந்து விடுபட இந்த வாஸ்து பரிஹாரங்களை வீட்டில் பின்பற்றுவதன் மூலம் சிக்கலில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. அவை நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன. மற்றும் எதிர்மறை ஆற்றலை விரட்டுகின்றன.
  2. வீட்டின் முன் கதவு சரியான மட்டத்தில் இருக்க வேண்டும். வீட்டின் பிரதான கதவு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தால் நல்லது. வீட்டின் முன் கதவு வடகிழக்கு திசையில் இருந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
  3. வீடு சரியான திசையில் இல்லாவிட்டால் பிரதான நுழைவாயிலின் மீது பிரமிடு அல்லது ஸ்வஸ்திகா சின்னத்தை வைப்பது நல்லது என கருதப்படுகிறது.
  4. வீட்டின் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் அழுக்கு மற்றும் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுவது நல்லது என நம்பப்படுகிறது.
  5. உடைந்த, விரிசல் அடைந்த பொருட்கள், வேலை செய்யாத எலக்ட்ரானிக் பொருட்களை அப்புறப்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது.
  6. வீட்டில் துளசி செடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் அதிர்ஷ்ட மூங்கில் செடியும் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
  7. தியானம் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். ஓம் மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பது நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும் என கருதப்படுகிறது.
  8. வீட்டின் சுவர்களின் வண்ணங்களைப் பொறுத்தவரை, வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை நிறங்கள் நேர்மறையைக் கொண்டு வரும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
  9. வீட்டில் பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றலைப் பெறலாம். வாஸ்து தோஷங்கள் இருந்தால் நீக்கலாம் என கருதப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்