வாஸ்து குறிப்புகள்: உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைக்கும்போது மனதில் வைக்கவேண்டிய வாஸ்து குறிப்புகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாஸ்து குறிப்புகள்: உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைக்கும்போது மனதில் வைக்கவேண்டிய வாஸ்து குறிப்புகள்!

வாஸ்து குறிப்புகள்: உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைக்கும்போது மனதில் வைக்கவேண்டிய வாஸ்து குறிப்புகள்!

Marimuthu M HT Tamil Published May 12, 2025 02:19 PM IST
Marimuthu M HT Tamil
Published May 12, 2025 02:19 PM IST

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கான வாஸ்து சாஸ்திரத்தில் பல வகையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்து விதிகளை மனதில் கொள்வதன் மூலம், ஒருவர் வெற்றிப் படிக்கட்டில் ஏற முடியும். கடை அல்லது அலுவலகத்தின் வாஸ்து சரியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வாஸ்து குறிப்புகள்: உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைக்கும்போது மனதில் வைக்கவேண்டிய வாஸ்து குறிப்புகள்!
வாஸ்து குறிப்புகள்: உங்கள் அலுவலகம் அல்லது கடை அமைக்கும்போது மனதில் வைக்கவேண்டிய வாஸ்து குறிப்புகள்!

இது போன்ற போட்டோக்கள்

வாஸ்து விதிகளை மனதில் கொள்வதன் மூலம், ஒருவர் வெற்றிப் படிக்கட்டில் ஏற முடியும். கடை மற்றும் அலுவலகத்தின் வாஸ்து சரியாக இருந்தால் வருவாய் கூடி, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதே நேரத்தில், வாஸ்து குறைபாடுகளால், ஒருவர் பல வகையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு கடை மற்றும் அலுவலகத்தில் என்ன மாதிரியான வாஸ்து குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு, செயல்பட வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அலுவலக வாஸ்து:

வடக்கு திசையில் கணக்காளர் துறை

வாஸ்து சாஸ்திரத்தின்படி, அலுவலகத்தில் காசாளர் உட்பட கணக்கியல் துறை வடக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும்.

விருந்தினர்களுக்கான திசை:

விருந்தினர்களுக்கான இருக்கைப் பகுதியானது வடமேற்குத் திசையில் இருக்க வேண்டும்.

அலுவலக நுழைவுவாயில்:

அலுவலகத்தின் நுழைவுவாயில் வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும்.

அனைத்துப் பொருட்களும் அமைக்கப்பட்டிருக்கும் விதம்:

அலுவலகத்தில் உள்ள மேஜையில் செடிகள், கடிகாரங்கள், உருண்டைகள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் போன்றவற்றை ஒழுங்கான முறையில் வைத்திருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

கடையின் அக்னி மூலையில் செய்ய வேண்டிய பரிகாரம்:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் அக்னி மூலையில், ஒரு சிவப்பு கண்ணாடி கிண்ணத்தில் சில கோமதி சக்கரங்களை(ஆன்லைனில் கிடைக்கக்கூடியது) வைக்கவும்.

ஸ்வஸ்திகாவை தயார் செய்யுங்கள்:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு நல்ல நேரத்திலோ, நட்சத்திரத்திலோ சகுண ஸ்வரத்தில் உங்கள் இருக்கைக்குப் பின்னால் ஒரு குங்குமப்பூ ஸ்வஸ்திகா வரைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும், நீங்கள் வீட்டை விட்டு கடைக்கோ அல்லது அவலுவலகத்துக்கு வெளியேறும் போதெல்லாம், வெளியேறுவதற்கு முன்பு ஏதாவது இனிப்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பவும்.

பெட்டகம்:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையில் உள்ள பெட்டகமானது, தெற்கு அல்லது மேற்கு சுவரால் தாங்கி நிற்க வேண்டும். அப்படி ஒரு இடத்தில் ஒரு பெட்டகம் இருப்பது மங்களகரமானது.

கவுன்ட்டர்:

வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையில் உள்ள கவுன்ட்டர் விற்பனையாளரின் முகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும், வாடிக்கையாளரின் முகம் தெற்கு அல்லது மேற்கு நோக்கியும் இருக்கும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

பொறுப்பு துறப்பு:-

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.