Vastu Tips: வீட்டில் நேர்மறை ஆற்றல், பிணைப்பு அதிகரிக்க.. குடும்ப போட்டோக்கள் எந்த திசையில் வைக்கனும்! எதை செய்ய கூடாது
Vastu Tips: வீட்டில் நேர்மறை ஆற்றல், குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிணைப்பு அதிகரிக்க குடும்ப போட்டோக்களை சரியான திசையில் மாட்ட வேண்டும். தவறியும் செய்ய கூடாத விஷயங்கள் பற்றிய வாஸ்து டிப்ஸ் இதோ
வாஸ்து சாஸ்திரத்தை முறையாக பின்பற்றுகிறவர்கள் பலர் உள்ளார்கள். வாஸ்துவை சரியாக பின்பற்றுவதன் மூலம் சிரமங்களில் இருந்து விடுபடலாம். வீடுகளில் வாஸ்து பின்பற்றுவதன் மூலம், நேர்மறை ஆற்றல் பாய்ந்து, எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது.
வீட்டில் உள்ள சாமான்களை வாஸ்து படி அமைப்பதன் மூலமும், வாஸ்து முறையை பின்பற்றி வீடு கட்டுவதன் மூலமும் பல பிரச்னைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
வாஸ்து படி, வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பது நேர்மறை அதிர்வுகளைத் தருகிறது. இதனால் வீட்டில் ஒற்றுமையை ஏற்படுவதுடன், உறவுகளுக்கு இடையே அன்பைக் கொண்டு வரும்.
குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதும் வாஸ்து படி நல்லது. வீட்டை அழகாக அலங்கரிப்பதின் ஒரு பகுதியாக, குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை வீடுகளில் வைப்பதற்கோ அல்லது சுவர்களில் தொங்க விடுவதற்கோ பலரும் விரும்புவார்கள். குடும்ப புகைப்படம் அன்பு மற்றும் ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறது.
வாஸ்து படி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைப்பது நேர்மறை ஆற்றல் பாயும். ஆனாலும் புகைப்படங்களை சரியான திசையில் வைப்பதன் மூலமே நேர்மறையை பெறுவதோடு, மகிழ்ச்சியையும் அடைய முடியும்.
குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வீட்டில் வைத்தால் என்ன நடக்கும்?
வாஸ்து படி, வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்தால் நேர்மறை அதிர்வுகளும், ஆற்றலும் அதிகரிக்கிறது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைப்பது, அனைவரும் இணைந்திருக்க வேண்டும், அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
குடும்ப புகைப்படங்களை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து படி குடும்ப புகைப்படங்களை வீட்டில் வைப்பதற்கு முன் அவற்றை எந்த திசையில் வைப்பது என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் எந்தெந்த இடங்களில் குடும்ப புகைப்படங்கள் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி வாஸ்து நிபுணர்கள் கூறியிருக்கும் விஷயங்களை பார்க்கலாம்
லிவிங் ரூம்
லிவிங் ரூம் அல்லது ஹாலில் தான் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் வந்து உட்காருவார்கள். நல்ல புகைப்படங்கள் வாழ்க்கை அறையில் வைக்கப்பட வேண்டும். எனவே இங்கு வைக்கும் புகைப்படங்கள் நல்ல படங்களாக இருக்க வேண்டும். குடும்பப் புகைப்படங்களை வடக்கு அல்லது கிழக்குச் சுவர்களில் வைப்பதன் மூலம் பிணைப்புகள் வலுவாகவும், உறுதியாகவும் இருக்கும்.
பெட்ரூம்
படுக்கையறையில் குடும்ப புகைப்படங்களை வைக்க விரும்பினால், தென்மேற்கு திசையில் வைப்பதால் நன்மைகளை பெறலாம்
வீட்டின் நுழைவு வாயில்
வீட்டு வாசலில் நுழைவு பகுதியிலும் குடும்ப புகைப்படங்களையும் வைக்கலாம். இப்படி செய்வதால் நல்ல தொடர்புகள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம்
டைனிங் ஏரியாவில் வைக்கலாமா?
உணவு சாப்பிடக்கூடிய டைனிங் ஏரியாவில் குடும்ப புகைப்படங்களையும் வைக்கலாம். இங்குதான் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இங்கு குடும்ப புகைப்படங்களை வைப்பது நேர்மறை ஆற்றல் பாய உதவும். அத்துடன் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான பிணைப்புகள் வலுப்பெறும்.
இந்த தவறுகளை செய்யாதீர்கள்
குடும்பப் புகைப்படங்களை வைக்கும் போது வலி ஏற்படுத்தக்கூடிய, உணர்ச்சிவசப்படக்கூடிய அல்லது தனிமையாக இருக்கும் படங்களைப் வைக்கவோ அல்லது மாட்டவோ வேண்டால். இதன் விளைவாக எதிர்மறை தாக்கம் ஏற்பட்டு சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.
பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களும் பரிந்துரைகளும் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. நிபுணர் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன், சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் நல்லது.
டாபிக்ஸ்