Kitchen Vastu Tips: சமையலறை இப்படித்தான் இருக்கணும்.. நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்.. உங்க சமையலறை எப்படி?
Kitchen Vastu Tips: வாஸ்து முறைப்படி சமையலறை இல்லாவிட்டால் வீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள், உடல் ஆரோக்கிய கோளாறுகள், செல்வ செழிப்பு குறைபாடு உள்ளிட்டவைகள் அனைத்தும் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம்.

Kitchen Vastu Tips: சமையலறை என்பது சமைப்பதற்கான கூடம் என பலரும் நினைத்து வருகின்றனர் ஆனால் நமது வீட்டில் முக்கிய ஆற்றல் மையமாக சமையலறை விளங்கி வருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறை இருக்கும் திசை அதன் நிறம் மற்றும் அதில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நமது வீட்டின் செல்வ செழிப்பை நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.
நமது வாழ்வின் அடிப்படை பிரதானமாக உணவு விளங்கி வருகிறது. அப்படி நாம் சமைக்கும் உணவின் இருப்பிடங்கள் மிகவும் சுத்தமாகவும் சரியான அமைப்பின் முறைகளும் இருக்க வேண்டும் என வாசல் சாஸ்திரம் கூறுகிறது.
வீட்டில் உருவாகக்கூடிய செல்வம் மற்றும் செழிப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை சமையலறை நிர்ணயம் செய்கின்றன. வாஸ்து முறைப்படி சமையலறை இல்லாவிட்டால் வீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள், உடல் ஆரோக்கிய கோளாறுகள், செல்வ செழிப்பு குறைபாடு உள்ளிட்டவைகள் அனைத்தும் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
சமையலறையில் பின்பற்ற வேண்டியவைகள்
- நாம் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு சமையல் அறையில் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
- சமையல் அறையில் குப்பை தொட்டி மற்றும் துடைப்பம் உள்ளிட்டவைகளை எப்போதும் வைக்க கூடாது.
- கடிகார திசையில் திறக்கப்படக்கூடிய அளவிற்கு சமையல் அறை கதவு இருக்க வேண்டும்.
- சமையலறையில் காற்று சுழற்சி தேவையான அளவிற்கு வெளிச்சம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும்.
- எப்போதும் சமையல் அறையில் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டும்.
சமையலறையில் நாம் வைக்க வேண்டிய பொருட்கள்
- குளிர்சாதன பெட்டியில் சமையலறையில் தென்மேற்கு திசை நோக்கி நாம் வைக்க வேண்டும்
- வட மேற்கு திசையில் பருப்பு வகைகள் தானியங்கள் மற்றும் மசாலா பொருட்களை வைக்க வேண்டும்.
- வடகிழக்கு திசை நோக்கி வாட்டர் பில்டர் மற்றும் பாத்திரம் கழுவும் சிங்க் இருக்க வேண்டும்.
- தென்கிழக்கு மூலையில் அடுப்பு மற்றும் கேஸ் அடுப்பை வைக்க வேண்டும். சமைக்கும்போது அதன் முகம் கிழக்கு நோக்கி பார்த்தபடி இருக்க வேண்டும்.
சமையலறை திசை
- சமையலறைக்கு தென்கிழக்கு திசை மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது அது அக்னி மூலையில் இடமாக கூறப்படுகிறது கண்களுக்கு திசையில் சமையலறை இருப்பது வீட்டில் நல்ல ஆற்றலை வெளிப்படுத்தும்.
- தென்கிழக்கு மூலையில் சமையலறை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் வடமேற்கு திசையில் கட்டி பயன்படுத்தலாம்.
- சமையலறை கட்டுவதை தென்மேற்கு கிழக்கு வடக்கு உள்ளிட்ட திசைகளை போன்றவைகளை தவிர்ப்பது நல்லது
சமையலறை நிறம்
- சமையலறையில் வெள்ளை நிறம், மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் அதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இத நிறங்கள் நமது சமையலறையில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
- அடர் பழுப்பு நிறங்கள், நீலம், கருப்பு உள்ளிட்டவைகள் சமையலறைக்கு ஏற்றத்தக்க நிறங்கள் கிடையாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
