Positive Energy: மரியாதை, புகழ், செல்வம் என நேர்மறை ஆற்றலை அள்ளி தரும் ஏழு குதிரைகள் புகைப்படம்!வீட்டில் எங்கு வைக்கலாம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Positive Energy: மரியாதை, புகழ், செல்வம் என நேர்மறை ஆற்றலை அள்ளி தரும் ஏழு குதிரைகள் புகைப்படம்!வீட்டில் எங்கு வைக்கலாம்

Positive Energy: மரியாதை, புகழ், செல்வம் என நேர்மறை ஆற்றலை அள்ளி தரும் ஏழு குதிரைகள் புகைப்படம்!வீட்டில் எங்கு வைக்கலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 21, 2023 07:55 PM IST

வாஸ்து முறைப்படி நேர்மறை ஆற்றலை தரும் சக்திகளில் ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படத்துக்கும் உண்டு என சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் இருக்கும் புகைப்படங்களின் சிறப்புகளும், அதில் வீட்டில் எங்கு மாட்டி வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்

ஏழு குதிரைகள் தரும் வாஸ்து நன்மைகள்
ஏழு குதிரைகள் தரும் வாஸ்து நன்மைகள்

இது போன்ற போட்டோக்கள்

ஏழு என்ற எண்ணுக்கு பல்வேறு விதமான சிறப்புகள் இருக்கின்றன. சப்தரிஷிகள், வானவில் வண்ணங்கள், நாள்கள், லோகங்கள், ஸ்வரங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அதேபோல் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரிய பகவான் வலம் வருகிறார் என ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. எனவேதான் அதிர்ஷ்டம், நன்மை தரும் குரு ஏழு குதிரைகளில் வருவது போல் ஏழு குதிரைகள் ஓடி வருவது போன்ற புகைப்படத்தை வீட்டில் வைப்பதால் செல்வ வளம் அதிகரிப்பதோடு, தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏழு குதிரை ஓடி வரும் புகைப்படத்தை வீட்டில் வைத்தால், வீடு சுபிட்சமாக இருக்கும் என வாஸ்துவில் கூறப்படுகிது. இந்த படத்தை கிழக்கு திசையை நோக்கி மாட்டிவைகத்தால் வீட்டில் நல்ல காரியம் நடக்கும் எனவும், வடக்கு திசையை நோக்கி ஓடுவது போல் மாட்டிவைத்தால் வேலையில் பதிவு உயர்வுக்காக காத்திருப்போர் பலன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் குதிரைகள் தெற்கு திசையில் ஓடும் விதமாக படத்தை மாட்டி வைத்தால் உங்களுக்கு மரியாதை, பெயர், புகழ், கிடைக்கும் என கூறப்படுகிறது. கடன் தொல்லை நீங்க நினைப்பவர்கள் ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும்.

ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிற பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் அமைதியையும் அதிகரிக்கிறது.

வெள்ளை குதிரைகள் நேர்மறை ஆற்றலின் சின்னங்களாக உள்ளன. இவை எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தியை கொண்டிருப்பதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக்கூடாது. அதேபோல் பூஜை அறை, படிக்கும் அறை,பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பதும் சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்