Vastu Tips: உஷார் பெண்களே.. வாஸ்து படி சமையலறையில் என்ன பொருள் கீழே விழாக்கூடாது தெரியுமா?
Vastu Tips: வாஸ்து படி, வீட்டில் சில பொருட்கள் கீழே விழாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். மேலும், கண்ணாடி பொருட்கள் கீழே விழக்கூடாது. அப்படி செய்யவில்லை என்றால் சில பணிகள் தோல்வியில் சென்று முடியும் என சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு அறைக்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, வீட்டில் உள்ள பொருட்களை சரியாக ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
வாஸ்து படி, வீட்டில் சில பொருட்கள் கீழே விழாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். மேலும், கண்ணாடி பொருட்கள் கீழே விழக்கூடாது. கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்தால், அது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும். இதுபோன்ற அறிகுறிகளால் சில பணிகள் சேதமடைந்துள்ளன. அப்படி செய்யவில்லை என்றால் சில பணிகள் தோல்வியில் சென்று முடியும் என சொல்லப்படுகிறது.
சமையலறைக்கு முன்னுரிமை
வீட்டு சமையலறையை மிகவும் புனிதமாக கருதுகிறோம். அங்கு தான் லட்சுமி தேவி வாசம் செய்கிறார். சமையலறை வாஸ்து படி கட்டப்பட வேண்டும். பூஜை அறைக்குப் பிறகு சமையலறைக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்தகைய சமையலறையில் சில விஷயங்கள் நம் கையிலிருந்து நழுவக்கூடாது. இதனால் வீட்டையே வாஸ்து தோஷம் சூழ்ந்து கொள்கிறது.
எண்ணெய் முக்கியம்
ஆம்.. வாஸ்து படி வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்கள் சிலவை கீழே விழக்கூடாது. ஏனெனில் இது சனியுடன் தொடர்புடையது. வாஸ்து படி சமையல் அறையில் எண்ணெய் விழுந்தால் சனி தோஷம் ஏற்படும். இது குடும்பசுழல் வறுமைக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக சமையலறையில் சமையல் எண்ணெயின் கீழ் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உப்பு
சமையலறையையில் மிகவும் முக்கியமான ஒன்று உப்பு. உப்பு, சந்திரனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. வாஸ்து படி வீட்டு சமையலறையில் உப்பு கீழே விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். உப்பு என்பது லட்சுமி தேவியின் பிரதிபலிப்பாகும். சமையல் அறையில் உப்பு கீழே விழக்கூடாது. இதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கிறது. இது நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
பால்
நாம் தினமும் பால் குடிக்கிறோம். வீட்டில் தேநீர் மற்றும் காபிக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பால் கொதிக்கும் போது கீழே வழியாமல் பார்த்து கொள்ள வேண்டும். வாஸ்து படி, பால் சிந்துவதும் தோஷத்திற்கு வழிவகுக்கிறது. சமையலறையில் எந்த சூழ்நிலையிலும் பால் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்