Vastu Tips : செல்வம் கையில் நிற்கவில்லையா.. வீட்டில் இந்த மாற்றம் செய்து பாருங்க!
வாஸ்து படி, உங்கள் வீட்டில் எங்காவது குழாயில் இருந்து தண்ணீர் கசிந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். வீட்டில் கசியும் தண்ணீர் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அனைத்தும் வாஸ்து படி இருந்தால் வீட்டில் சுபிட்சம் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் ஓடினால்.. நாம் சம்பாதிக்கும், பணமும் செலவாகும் என்கிறது அறிவியல். மேலும் வீட்டில் எந்த திசையில் குழாய் இருக்க வேண்டும், செல்வத்திற்கும் தண்ணீர் வீணாவதற்கு உள்ளிட்ட என்ன தொடர்ப்பு இருக்கிறது என பார்க்கலாம்.
வாஸ்து படி, உங்கள் வீட்டில் எங்காவது குழாயில் இருந்து தண்ணீர் கசிந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். வீட்டில் கசியும் தண்ணீர் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
சமையலறையில் உள்ள குழாய்
குறிப்பாக உங்கள் சமையலறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் ஓடினால், அது வாஸ்து அடிப்படையில் நல்லதல்ல. சமையலறை நெருப்பு கடவுளுக்கு சமம். நெருப்பும் தண்ணீரும் எங்கு சேருகிறதோ அங்கு பிரச்னைகள் தொடங்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
மேலும், குடும்ப உறுப்பினர்களின் உடல் நலக்குறைவு, வணிக இழப்பு மற்றும் நிதி இழப்பு ஆகியவை கவலையளிக்கின்றன. எந்த வீட்டில் தண்ணீர் விரயமாகிறதோ, அந்த வீட்டில் எதிர்மறையான சூழல் நிலவுகிறது. அது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட, வீட்டில் உள்ள குழாய்களை சீக்கிரம் சரி செய்வது நல்லது.
நீர் குழாய் இந்த திசையில் இருக்க வேண்டும்
வாஸ்து எல்லாவற்றிற்கும் வழி காட்டுகிறது. நம் வீட்டில் நிறுவப்பட்ட குழாய்களும் வாஸ்து படி இருக்க வேண்டும். நாம் விரும்பிய படி நம்மை ஒழுங்குபடுத்தினால், எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
தண்ணீர் தொட்டி அல்லது அது தொடர்பான எதையும் நிறுவ அதை வீட்டில் சரியான திசையில் பொருத்த வேண்டும்.
தண்ணீர் குழாய் அல்லது தொட்டி வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இந்த திசையில் இருந்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். அந்த வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.
நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். வாஸ்து படி, வீட்டில் உள்ள குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவது சந்திரனின் பலவீனத்தைக் குறிக்கிறது. குழாய்யை சரியான திசையில் வைத்தால் சந்திரனின் சக்தி உங்கள் மீது இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்