Vastu Tips: ‘உங்கள் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லையா?’: படிக்கும் குழந்தைகளுக்கான வாஸ்து குறிப்புகள்
Vastu Tips:: வாஸ்து படி பின்பற்றினால் பல பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். படிக்கும் குழந்தைகளுக்கான வாஸ்து குறிப்புகள் குறித்து அறிந்துகொள்வோம்.

Vastu Tips: ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருப்பர்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
ஆனால், பல குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். உங்கள் பிள்ளைகளுக்கும் படிப்பில் ஆர்வம் இல்லையா? இதைச் செய்யுங்கள். குறிப்பாக, இந்த வாஸ்து படி சில விஷயங்களை முயன்றால், பல பிரச்னைகளை எளிதில் சமாளிக்க முடியும்.
வாஸ்து படி சில விஷயங்களை மாற்றும்போது, நேர்மறை ஆற்றல் உள்ளே பாய்கிறது மற்றும் எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது. உங்கள் குழந்தைகள் சரிவர படிக்கவில்லையா வாஸ்துப்படி இந்த முறைகளை பின்பற்றுங்கள். இதனால் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவற்றை பின்பற்றினால், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுவர்.
குழந்தைகள் நன்றாகப் படிக்க விரும்பினால் இதைச் செய்யுங்கள்
- அறையில் சரியான நிறங்கள்:
உளவியலின்படி, குழந்தைகளின் படிக்கும் அறை நல்ல வண்ணத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக, வெளிர் பச்சை மற்றும் வெளிர் பழுப்பு நிறம் ஆகியவை குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட உதவியாக இருக்கும்.
2. இறைவனின் திருவுருவப்படம் தேவை:
உங்கள் வீட்டில் விநாயகரின் திருவுருவப் படமோ, விஷ்ணுவின் திருவுருவப் படமோ, முருகப்பெருமானின் திருவுருவப் படமோ ஒன்றை வாங்கிமாட்டுவது நல்லது. இப்படி செய்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். குழந்தைகளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க:| Lord Muruga: சுந்தரர் பொன் பொருளை பிடுங்கிய முருகப்பெருமான்.. சிவபெருமான் திருவிளையாடல்.. கொளஞ்சியப்பர் கோயில்!
3. சரஸ்வதி யந்திரம்:
குழந்தைகள் நன்கு படிக்க, சரஸ்வதி தேவி யந்திரத்தை அறையில் நீங்கள் வைக்கலாம். இப்படி சரஸ்வதி தேவியின் யந்திரத்தை வைப்பது நேர்மறை ஆற்றலைத் தருகிறது. உங்கள் குழந்தை படிக்க விரும்பவில்லை என்றால், திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் சரஸ்வதி தேவி யந்திரத்தை வைத்துப் பாருங்கள். குழந்தைகளுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும். மேலும், ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அதன் மீது ஸ்வஸ்திகா முத்திரையை மஞ்சள் கொண்டு வரையவும். ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி செய்து வந்தால் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
4. துளசி இலைகள்:
குழந்தைகள் தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், மூளை கூர்மையாக வேலை செய்யும். சுறுசுறுப்பாக இயங்கும். குழந்தைகள் திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துளசி இலைகளை சாப்பிடுவது நல்லது. குழந்தைகள் திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் கூடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்