தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: நிதி நெருக்கடி, கணவன் - மனைவி சண்டை அகல வேண்டுமா? வீட்டில் காலணிகளை சரியான இடத்தில் வைத்தால் மாற்றம் நிகழும்

Vastu Tips: நிதி நெருக்கடி, கணவன் - மனைவி சண்டை அகல வேண்டுமா? வீட்டில் காலணிகளை சரியான இடத்தில் வைத்தால் மாற்றம் நிகழும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 04, 2024 09:55 PM IST

வீட்டில் காலணிகளை நீங்கள் வைக்கும் இடம் பொருளாதார முன்னேற்றத்தை பெறவும், திருமண உறவில் உள்ள சண்டை, சச்சரவுகளை போக்கவும் செய்யும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் சரியான இடத்தில் காலணிகளை வைக்கும் வாஸ்து டிப்ஸ்
வீட்டில் சரியான இடத்தில் காலணிகளை வைக்கும் வாஸ்து டிப்ஸ்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலிணிகளை பின் பகுதியில் வைத்திருந்தால், நெருக்கடிகள் நீங்கும், திருமண முரண்பாடுகள் அகலும் என கூறப்படுகிறது.

உங்கள் காலணிகளை எங்கும் வைக்க கூடாது

வீட்டில் உங்கள் காலணிகளை கழற்றும்போது, ​​நீங்கள் அவற்றை எந்த வழியில் வைத்திருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது சம்பந்தமாக வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. 

வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் காலணிகளை வைக்க வேண்டும். காலணிகள் மற்றும் செருப்புகளை எப்போதும் அதற்குரிய ஸ்டாண்டில் மட்டுமே வைக்க வேண்டும் பயன்படுத்தாத பழைய செருப்புக்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுங்கள். பழைய செருப்புக்களை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.

எந்த இடங்களில் காலணிகள் அல்லது ஷூ வைத்தால் நேர்மறையான விளைவுகளை கிடைக்கும் என்பதிலும் சில குறிப்புகள் இருக்கின்றன.

காலணிகளை எங்கு வைக்க வேண்டும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தென் மேற்கு, மேற்கு திசையில் மட்டுமே காலணிகளை வைக்கலாம். இவ்வாறு காலணிகளை வைத்துக் கொள்வதால் நிதிச் சிக்கல்களைக் குறைக்கலாம். மேலும், வீட்டின் முன் கதவுக்கு முன்னால் காலணிகளை வைத்திருப்பது பற்றிய சில விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

முன் கதவின் அருகே காலணிகளை வைக்கலாமா

வீட்டின் முன் கதவுக்கு முன்னால் காலணிகளை வைப்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, வீட்டின் நுழைவாயிலில் அழுக்கு காலணிகளை சிதறி வைப்பது நல்ல பலனைத் தராது. 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. இப்படி வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்.

வீட்டு வாசலில் முன் கதவுக்கு முன்னால் துளசி செடி இருந்தாலும் அதைச் சுற்றி ஷூ பேக் வைக்கக் கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

திருமண முரண்பாடுகளைத் தவிர்க்க காலணிகளை எவ்வாறு வைக்க வேண்டும்

வாஸ்துசாஸ்திரத்தின் படி, நீங்கள் திருமண முரண்பாடுகளைத் தவிர்க்க மறந்தும் கூட படுக்கையறையில் காலணிகள் அல்லது ஷூக்களை வைக்க வேண்டாம். படுக்கையறைக்கு வெளியே காலணிகள் அல்லது செருப்புகளை விட்டு விடுங்கள். இதை தலைகீழாக வைத்தால், சண்டை சச்சரவுகள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. 

படுக்கையறையில் காலணிகளை வைத்தால், அது கணவன்-மனைவி இடையே சண்டையை அதிகரிக்கும், தூரத்தை அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். 

பலர் படுக்கையறையில் அலமாரிகளை வைத்திருக்கிறார்கள். நிதிச் செழுமையாக இருக்க வேண்டுமானால் எப்போதும் காலணிகளை அலமாரியில் வைக்க கூடாது

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்