Vastu Tips: செல்வ செழிப்புடன் இருக்க..! வீட்டை சுத்தமாக வைப்பது முதல் செடி வளர்ப்பது வரை வாஸ்து கூறும் டிப்ஸ்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: செல்வ செழிப்புடன் இருக்க..! வீட்டை சுத்தமாக வைப்பது முதல் செடி வளர்ப்பது வரை வாஸ்து கூறும் டிப்ஸ்

Vastu Tips: செல்வ செழிப்புடன் இருக்க..! வீட்டை சுத்தமாக வைப்பது முதல் செடி வளர்ப்பது வரை வாஸ்து கூறும் டிப்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 09, 2024 01:38 AM IST

வீட்டை சுத்தமாக வைப்பதும், உணவை எப்படி சாப்பிட வேண்டும், வீட்டில் செடி வளர்ப்பது வரை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறும் விஷயங்களை பார்க்கலாம்

வீட்டை சுத்தமாக வைப்பது முதல் செடி வளர்ப்பது வரை வாஸ்து கூறும் டிப்ஸ்
வீட்டை சுத்தமாக வைப்பது முதல் செடி வளர்ப்பது வரை வாஸ்து கூறும் டிப்ஸ்

வீட்டில் இருக்கும் கழிப்பறைக்கு அருகில் உட்காரும் சோபா அல்லது படுக்கை எதுவும் வைக்க கூடாது. இந்த இடத்தில் படுக்கவும் கூடாது. வீட்டின் பூஜை அறையை நோக்கியவாறு படுக்கை அறையின் கதவு இருக்க கூடாது.

அதேபோல் படுக்கை அறையில் நீள நிறத்திலான லைட்களை பயன்படுத்த வேண்டும். சிவப்பு நிறத்திலான பல்ப் எந்த காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் திருமணமான தம்பதிகளுக்கு இடையே இணைக்கம் ஏர்படாது. இவ்வாறு செய்வதால் ஜோடிகளுக்கு இடையே பிரிவும் ஏற்படலாம்.

வீட்டின் பிரதான நுழைவாயில் பெரியதாக இருக்க வேண்டும்

உங்களது வீட்டில் இருக்கும் பிரதான நுழைவாயில் மற்ற கதவுகளை விட பெரியதாக இருக்க வேண்டும். அதேபோல் வீட்டின் இருக்கும் குழாய்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். வீட்டுக் குழாயிலிருந்து தண்ணீர் எப்போதும் கசியக்கூடாது. சமையலறையில் பயன்படுத்தும் குழாயில் இருந்து தண்ணீரை வீணாக்கினால் குடும்பத்தில் பரஸ்பர இணக்கம் இருக்காது.

கழிப்பறையில் தண்ணீரை வீணாக்கினால் நோய் வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வீட்டுக்கு வெளியே உள்ள குழாய் நீர் வீணாகினால் அந்த வீட்டின் மீது வெளி நபர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. அக்கம் பக்கத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் நடக்கலாம்.

அன்றாட வாழ்க்கைக்கு வருமானம் போதாமல் போகலாம். சமையலறை குழாய்கள் மற்றும் அடுப்புகள் அருகருகே இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் வேலையைத் தொடங்கும் முன் அடுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் உடல்நல கோளாறுகள் எதுவும் ஏற்படாது.

வீட்டில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட அலமாரிகளை எப்போதும் மூடியிருக்க வேண்டும். அவை வெளிப்படையான கண்ணாடியுடன் பொருத்தப்படக்கூடாது. அலமாரிகளையோ அல்லது செல்ப்களை எப்போதும் திறந்து வைக்க கூடாது. அலமாரிகளுக்குள் தூசி இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்

இப்போதெல்லாம் செடிகளை வீட்டுக்குள் வளர்ப்பது பலரது வழக்கமாக இருந்து வருகிறது. உலர்ந்த அல்லது பச்சை நிறமல்லாத தாவரங்களை வீட்டுக்குள் வைக்கக்கூடாது. வீட்டுக்கு வெளியில் இருக்கும் ஒரு கொடி வீட்டுக்குள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். முள் இருக்கும் செடிகளை வீட்டுக்குள் வளர்க்கக் கூடாது

கிச்சனை சுத்தமாக வைக்க டிப்ஸ்

சமையலறை எப்போதும் சுத்தமாக இருந்தால், நிதி சிக்கல்கள் இருக்காது. மேற்கு அல்லது தெற்கு திசையை பார்த்துவாறு சமைக்க கூடாது. சமையலுக்கு தேவையான பொருள்களை மேற்கு திசையில் அமைக்கலாம். ஆனால் கிழக்கு அல்லது தெற்கு திசைகள் முடிந்தவரை எடையுல்ல பொருள்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் தற்போது முன்பக்கம் தவிர வேறு எங்கும் ஜன்னல்கள் கிடையாது. உதாரணமாக, சமையலறையில் புகைகூண்டு என்பதே கிடையாது. அப்படி இடம் இருந்தால் அதன் அருகே உட்காரவோ, நிற்கவோ கூடாது.

முற்றத்தில் உட்காருவதற்கான தளபாடங்கள் சாலையை நோக்கி இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கவோ, வேறு வேலை செய்யவோ கூடாது.

வீட்டு முற்றத்தின் மையத்தில் சோபா அல்லது நாற்காலிகளை வைப்பது சிலரின் வழக்கமாக இருந்து வருகிறது. பூஜை அறை அல்லது சமையலறையில் முதுகை காட்டியவாறு உட்கார கூடாது. இவ்வாறு செய்வதால் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். மன நிம்மதி குறையும்.

சாப்பிடும்போது கையில், மடியில் தட்டை வைத்து சாப்பிடக் கூடாது. மேலும், காலணிகள் அணிந்து கொண்டு சாப்பிட வேண்டாம். இப்படி செய்தால் அன்னபூரணியை அவமதித்தது ஆகும்.

வீட்டுக்கு வெளியே நிற்பவர்களிடம், வீட்டுக்குள் நின்று கொண்டு எந்தப் பொருளையும் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்தக் குடும்பத்தில் செழிப்பு குறையும். எனவே அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்