தமிழ் செய்திகள்  /  Astrology  /  Vastu Tips For Growing Money Plant In Home To Getting Wealth And Clearing Debts

Money Plant Vastu: இந்த முறையில் மணி பிளாண்டை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும்! கடன் தொல்லை நீங்கும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 20, 2024 12:50 PM IST

வீட்டில் செல்வம் பெருகவும் கடன் தொல்லை தீர மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்

செல்வம் பெருக மணி பிளாண்ட் வளர்க்கும் டிப்ஸ்
செல்வம் பெருக மணி பிளாண்ட் வளர்க்கும் டிப்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது அனைவரது மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என கருதப்படுகிறது.

காயின் செடிகள் அல்லது மணி பிளான்டில் இருவகைகள் உள்ளன. முதல் வகை அசல் மற்றொன்று போலி. பழைய சீனி அல்லது இந்திய நாணயங்களைப் பயன்படுத்தி போலி நாணய காயின் செடிகளும் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. உங்களிடம் அசல் காயின் செடி இருந்தால், காய்ந்த இலைகளை உடனடியாக துண்டித்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுவதன் மூலமும், சரியான பராமரிப்பின் மூலமும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

மணி பிளான்ட் தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். மணி பிளான்ட்டை உங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப வீடு மற்றும் அலுவலகத்திலும் வைக்கலாம். மணி பிளான்டை வளர்க்க நினைப்பவர்கள் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை கிழக்கு திசையில் நட வேண்டும் என்கிறார்கள். உங்கள் படுக்கையறையை அலங்கரிக்கவும் அழகுபடுத்தவும் மணி பிளான்ட் செடியை வைத்துக்கொள்ளலாம். வீட்டில் மணி பிளான் செடியை வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்