இறந்த முன்னோர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?.. வாஸ்து டிப்ஸ் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இறந்த முன்னோர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?.. வாஸ்து டிப்ஸ் இதோ!

இறந்த முன்னோர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?.. வாஸ்து டிப்ஸ் இதோ!

Karthikeyan S HT Tamil
Published May 14, 2025 03:04 PM IST

வாஸ்து படி, இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டில் எந்த திசையில் வைப்பது சிறந்தது, என்ன தவறுகள் செய்யக்கூடாது, வாஸ்து படி பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இறந்த முன்னோர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?.. வாஸ்து டிப்ஸ் இதோ!
இறந்த முன்னோர்களின் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?.. வாஸ்து டிப்ஸ் இதோ!

இது போன்ற போட்டோக்கள்

வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுகிறது என்று கூறப்படுகிறது. வாஸ்துவை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். அதேவேளை பலர் இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை சரியான திசையில் வைத்திருப்பதில்லை. ஆனால் வாஸ்து படி, சரியான திசையில் வைத்தால், நீங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

வாஸ்து படி, இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை எந்த திசையில் வைப்பது சிறந்தது, என்ன தவறுகள் செய்யக்கூடாது, வாஸ்து படி பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன என்பதைக் இனி பார்ப்போம்.

இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை எங்கே வைக்க கூடாது?

வாஸ்துவின் படி, இறந்த மூதாதையர்களின் புகைப்படத்தை படுக்கையறை, பூஜை அறை அல்லது வரவேற்பறையில் வைத்திருப்பது நல்லதல்ல. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை பாதிக்கும். இது மன உளைச்சலை ஏற்படுத்தும். குடும்பத்தில் கஷ்டங்களும் ஏற்படலாம். சண்டை சச்சரவுகள் அதிகரிக்கலாம்.

இறந்த மூதாதையர்களின் புகைப்படங்களை எந்த திசையில் வைப்பது நல்லது?

வாஸ்து படி, இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை தெற்கு பக்கத்தில் வைப்பது நல்லது. இது யம தர்மராஜாவின் திசை. இந்த திசையில் வைத்தால், வாஸ்து தோஷங்கள் அல்லது சிரமங்கள் இருக்காது.

புகைப்படத்தை தெற்கு சுவரின் தெற்கு பக்கத்திலும், புகைப்படத்தில் உள்ள நபரின் முகம் வடக்கு பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும், இதனால் நீங்கள் நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் பெற முடியும்.

எத்தனை புகைப்படங்கள் வைக்கலாம்?

வாஸ்து படி, ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் வேலையிலும் சிரமங்கள் ஏற்படலாம். பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இறந்தவர்கள் படங்களுக்கு கற்பூரம் காட்டலாமா?

இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபடலாம். சுவாமிக்கு பூஜை செய்வது போல் மணி அடித்தும் முன்னோர்கள் படங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபடலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.