Astro Tips : நம் வீட்டில் வாடிய துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா.. எந்த நேரங்களில் எல்லாம் துளசியை பறிக்க கூடாது பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : நம் வீட்டில் வாடிய துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா.. எந்த நேரங்களில் எல்லாம் துளசியை பறிக்க கூடாது பாருங்க!

Astro Tips : நம் வீட்டில் வாடிய துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா.. எந்த நேரங்களில் எல்லாம் துளசியை பறிக்க கூடாது பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2025 06:30 AM IST

Vastu Tips : துளசிக்கு நிர்மால்ய தன்மை உண்டு. துளசி எவ்வளவு காய்ந்தாலும் அதை பூஜைக்கு பயன்படுத்தலாம். அதுதான் துளசியின் தனி சிறப்பு. இதனால் நாம் துளசி பறிக்க கிடைக்கும் உரிய நேரங்களில் துளசியை பறித்து அதை சேகரித்து வைத்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

Astro Tips : நம் வீட்டில் வாடிய துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா.. எந்த நேரங்களில் எல்லாம் துளசியை பறிக்க கூடாது பாருங்க!
Astro Tips : நம் வீட்டில் வாடிய துளசியை பூஜைக்கு பயன்படுத்தலாமா.. எந்த நேரங்களில் எல்லாம் துளசியை பறிக்க கூடாது பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

புனிதமான துளசி பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. துளசி இலை இல்லாமல் இறைவனின் பூஜையில் நிறைவு இல்லை.. இன்பம் இல்லை என்பது ஐதீகம். அதே நேரத்தில், துளசி இலைகள் அன்னை மகா லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. எனவே, துளசி செடி பச்சையாக இருந்தால், மகிழ்ச்சியும் செல்வமும் வீட்டில் இருக்கும். அதே நேரத்தில், துளசி செடியை முறையாக வழிபட வேண்டும், மேலும் சில விதிகளைப் பின்பற்றுவது அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, ஸ்ரீ நாராயணர் மற்றும் அன்னை லட்சுமியின் அருளைப் பெற, இந்த முறையில் துளசி வழிபாடு செய்யுங்கள்.

துளசியை வீட்டிற்கு உட்பகுதியில் வைத்து வளர்க்க கூடாது. வீட்டிற்கு வெளியில் அல்லது வீட்டிற்கு பின்புறம் நட்டு வைத்து வளர்க்கலாம். நாம் வழிபாடு செய்யும் துளசியை நாம் நமது பூஜைக்காக பறிக்க கூடாது. பூஜைக்கு நாம் பயன்படுத்தும் துளசியை நாம் தனியாக ஒரு தொட்டியில் வைத்து வளர்க்க வேண்டும்.

துளசியை எந்த நாட்களில் பறிக்க கூடாது பாருங்க

துளசியை ஒரு சில நாட்களில் மட்டும்தான் பறிக்க வேண்டும். துளசியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் பறிக்க கூடாது.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என எந்த கிரகண நேரத்திலும் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும்.

அமாவாசை பவுர்ணமி ஆகிய இரண்டு நாட்களிலும் துளசியை பறிக்க கூடாது.

வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு நாட்களிலும் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய 4 நாட்களிலும் துளசியை பறிக்க கூடாது. மற்ற எந்த நாட்களிலும் பிற்பகல் 12 மணிக்கு மேல் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும். மாலை நேரத்தில் கண்டிப்பாக பறிக்க கூடாது.

நமது வீடுகளில் நம் முன்னோர்களுக்கு தெவசம் கொடுக்கும் போது அல்லது அவர்கள் இறந்த திதி இருக்கும் நாட்களிலும் துளசி பறிப்பதை தவிர்க்க வேண்டும்.

திருவோண நட்சத்திரத்தின் போதும் துளசியை பறிக்க கூடாது. சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, ஏகாதசி போன்ற 5 திதிகளிலும் துளசியை பறிக்க கூடாது.

துளசி பறிக்க பின்பற்ற வேண்டிய விதி

துளசியை பறிக்க போகும் போது நகத்தை வைத்து கிள்ளி எடுப்பது, கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது. துளசி பறிக்கும் போது பிரார்த்தனை செய்ய வேண்டும். மனதிற்குள் துளசி தேவியே உன்னை நான் பறித்து கொண்டு போய் உனக்கு மிகவும் விருப்பமான நாராயணரின் பாதத்தில் சேர்க்க போகிறேன். ஆகவே எனக்கு அருள் செய் என்று வேண்டிக்கொள்வது நல்லது. சமஸ்கிருத மந்திரம் தெரிந்தவர்கள் அதை சொல்லாம்

துளசிக்கு நிர்மால்ய தன்மை உண்டு. துளசி எவ்வளவு காய்ந்தாலும் அதை பூஜைக்கு பயன்படுத்தலாம். அதுதான் துளசியின் தனி சிறப்பு. இதனால் நாம் துளசி பறிக்க கிடைக்கும் உரிய நேரங்களில் துளசியை பறித்து அதை சேகரித்து வைத்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்