Palli Vilum Palangal: கருப்பு பல்லி பார்த்தால் என்ன அர்த்தம்? ஜோடி பல்லிகளைப் பார்ப்பது எதன் அறிகுறி - பல்லி வாஸ்து
வீட்டில் பல்லிகளை பார்ப்பது இயல்புதான். பல்லிகள் சில சமயங்களில் நமக்கு நடக்கவிருக்கும் சுப மற்றும் அசுப சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன. கருப்பு பல்லிகளையும் வீட்டில் பார்க்க நேரிடும். அதை பார்த்தால் என்ன அர்த்தம்? ஜோடி பல்லிகளைப் பார்ப்பது எதன் அறிகுறி? என்பதை தெரிந்து கொள்ளலாம்
பல்லிகள் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் காணப்படும். சிலர் இந்தப் பல்லிகளைப் பார்த்தால் அமைதியடைகிறார்கள். இன்னும் சிலர் அவற்றை கண்டோலோ அல்லது தங்கள் மீது விழுந்தால் அபசகுனம் என்று பயப்படுவதும் உண்டு. இதற்கெல்லாம் முன் இந்த பல்லிகளைப் பற்றிய சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் பல்லிகள் இருப்பது சுப மற்றும் அசுப அறிகுறிகளைக் குறிக்கிறது. வீட்டில் பல்லிகளின் தோற்றம் அல்லது சில இடங்களில் பல்லி உங்கள் மீது விழுவது உங்களுக்கு ஏதோவொன்றைக் குறிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் பல்லியைப் பார்ப்பது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பல்லிகள் இருப்பது வீட்டுக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது. சில நாடுகளில், பல்லிகள் தீய சக்திகளை விரட்டும் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் சக்தி கொண்டவை என்றும் நம்பப்படுகிறது.
கருப்பு பல்லியைப் பார்ப்பதன் அர்த்தம் என்ன?
கருப்பு பல்லியை வீட்டில் பார்ப்பது நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. குறிப்பாக வீட்டின் பூஜை அறையில் அருகில் கருப்பு பல்லியை பார்ப்பது அசுப அறிகுறியாகும்.
வீட்டில் பண இழப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை வரலாம் என்பதற்கான அறிகுறியாகும். உண்மையில், பல்லி லட்சுமியின் அடையாளமாகக் கருதப்படுகிறது, ஆனால் கருப்பு பல்லி லட்சுமி தேவியைக் குறிக்கவில்லை. எனவே, வீட்டின் பூஜை அறைக்கு அருகில் கருப்பு பல்லியை பார்ப்பது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது.
வீட்டு வாசலில் பல்லியைப் பார்ப்பது
வீட்டின் நுழைவாயிலில் பல்லிகளைப் பார்ப்பது நல்ல அறிகுறியாகும். பிரதான கதவு வழியாக வீட்டுக்குள் பல்லி நுழைவதை நீங்கள் கண்டால், விரைவில் உங்கள் வீட்டிக்கு பணம், பொருளாதாரம் உயரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் இரண்டு பல்லிகளை ஒன்றாக பார்ப்பது
இரண்டு பல்லிகளை ஒன்றாகப் ஒன்றாக பார்ப்பதால் சுப அல்லது அசுப பலன்கள் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு பல்லிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை நீங்கள் கண்டால், அது ஒரு தீய அறிகுறியாக கருதப்படுகிறது. பல்லிகளின் சண்டை வீட்டில் நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். எனவே குடும்பத்தில் சில உறுப்பினர்கள் நோய்வாய்ப்படலாம்.
பூஜை அறைக்கு அருகே பல்லியைப் பார்ப்பது
பூஜை அறையில் பல்லியைப் பார்ப்பது சுப அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது வீட்டில் செழிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். எதிர்காலத்தில் நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம் என்பதை இது குறிக்கிறது. வெள்ளிக் கிழமையன்று சன்னதிக்கு அருகில் பல்லியைக் கண்டால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம்.
தரையில் விழும் பல்லி
பல்லி மீண்டும் மீண்டும் தரையில் விழுவது நல்லதல்ல. மேலும், ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணின் உடலில் பல்லி விழுவது பல சுப மற்றும் அசுப அறிகுறிகளைக் குறிக்கிறது.
பல்லி தரையில் ஊர்ந்து செல்வது நல்லது, ஆனால் பல்லி தொந்தரவு செய்யாமல் கவனமாக இருங்கள். பல்லியை கொல்லும் தவறை ஒரு போதும் செய்யாதீர்கள். பல்லியைக் கொல்வது உங்களுக்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்