Vastu : உங்க வீட்டில் நிதி நிலை வலுப்பட வேண்டுமா.. இந்த 6 செடிகள் உதவலாம்.. வாஸ்து நிபுணர்கள் முன் வைக்கும் டிப்ஸ்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu : உங்க வீட்டில் நிதி நிலை வலுப்பட வேண்டுமா.. இந்த 6 செடிகள் உதவலாம்.. வாஸ்து நிபுணர்கள் முன் வைக்கும் டிப்ஸ்

Vastu : உங்க வீட்டில் நிதி நிலை வலுப்பட வேண்டுமா.. இந்த 6 செடிகள் உதவலாம்.. வாஸ்து நிபுணர்கள் முன் வைக்கும் டிப்ஸ்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 05, 2025 05:22 PM IST

Vastu : தாவரங்கள் வீட்டிற்கு புத்துணர்ச்சி மற்றும் ஆக்ஸிஜனின் ஆதாரமாக மாறுவது மட்டுமல்லாமல் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கின்றன. வீட்டில் சில அதிர்ஷ்ட செடிகளை வைத்திருப்பது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். அப்படியான 6 செடிகளை இங்கு பார்க்கலாம்.

Vastu: ఆర్థిక పరిస్థితిని బలోపేతం చేయడానికి ఈ 6 మొక్కలను ఇంట్లో ఉంచండి
Vastu: ఆర్థిక పరిస్థితిని బలోపేతం చేయడానికి ఈ 6 మొక్కలను ఇంట్లో ఉంచండి

வாஸ்து என்பது பழமையான இந்திய கட்டிடக்கலை அமைப்பாக பார்க்கப்படுகிறது. வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.  வாஸ்து தோஷங்கள் நீங்க பல பரிகாரங்களும் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் பண கஷ்டம் விலகி வாழ்க்கை செழிக்க 6 செடிகளை நடலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்த, இந்த செடிகளை வீட்டில் வைத்திருங்கள்.

1.ஜேட் செடி

ஜேட் செடி மிகவும் அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படுகிறது. இந்த செடியை நமது வீட்டின் நுழைவாயிலில் வைப்பது நேர்மறை ஆற்றலைப் பரப்பி எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த செடி ஆக்ஸிஜனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் அதிகரிக்கிறது என நம்பப்படுகிறது.

2. அமைதி லில்லி

வீட்டில் நிதி ஸ்திரத்தன்மையை அடைய, அமைதி அல்லிகள் நடப்பட வேண்டும் என கருதப்படுகிறது. அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அமைதி அல்லி செடியை நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதுகாக்கும். முன்னேற்றத்திற்கான வழியைத் திறக்கிறது என கருதப்படுகிறது.

3. மூங்கில் செடி

மூங்கில் மரம் வீட்டிற்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கிழக்கு மூலையில் மூங்கில் மரத்தை நடுவது வீட்டிற்கு மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என கருதப்படுகிறது.

4. வாழை மரம்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வீட்டில் வாழை மரத்தை வணங்குவதால்விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற இயலும் என்பது நம்பிக்கை. அதே நேரத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மரத்தின் கீழ் நெய் தீபம் ஏற்றுவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதோடு, வாழ்க்கையின் துக்கங்களையும் நீக்கும் என நம்பப்படுகிறது.

5. மணி பிளாண்ட் 

இந்த மணி பிளாண்ட் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க வேலை செய்கிறது என நம்பப்படுகிறது.எனவே, வீட்டில் ஒரு நீல நிற பாட்டில் அல்லது கண்ணாடி ஜாடியில் ஒரு மணி பிளாண்டை வைக்கலாம் என கருதப்படுகிறது.

6. துளசி:

இந்து மதத்தில், துளசி மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் துளசி லட்சுமி தேவியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் துளசி செடியை நடுவது செல்வத்திற்கு நல்லது. நிறுத்தப்பட்ட பணிகள் கூட தொடங்கும் என கருதப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்