Vaikasi Maatham: நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி.. இம்மாதத்தில் பிறந்த மகான்கள் லிஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vaikasi Maatham: நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி.. இம்மாதத்தில் பிறந்த மகான்கள் லிஸ்ட்!

Vaikasi Maatham: நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி.. இம்மாதத்தில் பிறந்த மகான்கள் லிஸ்ட்!

Manigandan K T HT Tamil
May 09, 2024 12:58 PM IST

Vaikasi Maatham: வைகாசி மாதத்தில் தான் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசி பவுர்ணமி அன்று தான் கவுதம புத்தர் அவதரித்தார். அவர் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பவுர்ணமி அன்று தான்.

Vaikasi Maatham: நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி.. இம்மாதத்தில் பிறந்த மகான்கள் லிஸ்ட்!
Vaikasi Maatham: நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி.. இம்மாதத்தில் பிறந்த மகான்கள் லிஸ்ட்! (pixabay)

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும்.

வைகாசி மாதம் பாவங்களைப் போக்கும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்களும் சொல்கின்றன.

வைகாசி மாதத்தில் தான் சிவபெருமானின் நெற்றியில் இருந்து வந்த தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் விழுந்தது.

  • வைகாசி மாதத்தில் தான் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசி பவுர்ணமி அன்று தான் கவுதம புத்தர் அவதரித்தார். அவர் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பவுர்ணமி அன்று தான்.
  •  நம்மாழ்வார் அவதரித்த மாதமும் இந்த வைகாசி மாதம் தான். காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் இந்த வைகாசி பவுர்ணமி அன்று தான்.
  •  ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி திதி அன்று தான்.
  •  வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திர பாக்கியம் ஆகியவற்றை அளிக்கக் கூடிய மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது.
  •  வைகாசி மாத்ததில் பிறந்தவர்களில் பரம ரகசியத்தை இந்த வீடியோவில் பார்ப்போம்.
  •  இந்த வைகாசி மாத்ததில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  •  இவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இடத்தில் இருப்பார்கள்.
  •  இவர்களின் பலம் பொறுமைதான்.
  •  இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவார்கள்.
  •  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை எளிதாக அடையாளம் காண்பார்கள்

வசீகரத் தோற்றம்

  • இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம் அமைந்திருக்கும்.
  •  ஆடம்பரமாக வாழ்வதை விரும்புவார்கள்.
  •  பெண்களிடம் நயமும் நளினமும் கலந்திருக்கும். 
  •   இவர்கள் இன்பம், துன்பம், நிறை, குறைகளை சமமாக பாவிப்பார்கள்.
  •  இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை முழுமையாக தெரிந்து கொள்ள நினைப்பார்கள்.
  •  மனதில் வருத்தம், கோபம் இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
  •  குடும்பத்தில் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்.
  •  உற்றார், உறவினர், உடன்பிறப்பு எல்லோரையும் அனுசரித்து செல்வார்கள்.
  •  சில விஷயங்களைப் பிடிவாதமாக இருந்து சாதிப்பார்கள்.
  •  இவர்களின் கையில் எப்போது பணம் இருந்து கொண்டே இருக்கும்.
  •  தனது சுயதேவைக்கும், ஆசைக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.
  •  தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம், நிர்வாகத் திறமை, யுக்தி ஆகியவை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
  •  பல்துறை வித்தகராகவும், கலைத்துறையில் சாதனை புரியும் வாய்ப்பும் கொண்டிருப்பார்கள்.
  •  சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அச்சகத்துறையை நடத்துபவராகவும் இருப்பார்கள்.

பயணம் செய்வதில் ஆர்வம் அதிகம்

  • பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். சுற்றுலாக்கள், புனித தலங்கள் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
  • தனிமையை அதிகம் விரும்புவார்கள். உல்லாச பயணம் செல்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.
  • இயற்கை, கலை, அழகை ஆதரிப்பார்கள்.
  • தங்களின் பயண அனுபவங்களை மிகுந்த ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
  • இவர்களுக்கு உஷ்ணம், வயிறு கோளாறுகள் இருக்கும். சைனஸ், தும்ம, ஒற்றைத்தலைவலியால் அதிகம் அவதிப்படுவார்கள்.
  • வயது ஏற ஏற ஞாபக மறதி நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு.

Whats_app_banner

டாபிக்ஸ்