தமிழ் செய்திகள்  /  Astrology  /  Upayasari Yogam: Your Personal Astrological Tool For Growth And Transformation

Upayasari Yogam: ஜோக்கரை ஹீரோ ஆக்கும் உபயசாரி யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jan 17, 2024 01:38 PM IST

”சூரியனுக்கு இருபுறமும் சுபகிரங்கள் இருந்தால் ஜாதகர் நீடித்த ஆயுள் உடையவராக இருப்பார்”

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், தனயோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் உபயசாரி யோகம் சற்று வேறுபட்டது. இது சூரியனை மையமாகக் கொண்ட ஒரு யோகம்  என சாஸ்திர நூல்கள் கூறுகின்றது. 

சூரிய பகவான் ஒருவரது ஜாதகத்தில் எந்த ராசியில் இருந்தாலும், அந்த ராசிக்கு முன்னும் பின்னும் குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களில் ஏதேனும் இருந்தால் அது உபயசாரி யோகம் எனப்படுகிறது. இந்த யோகம் அதிர்ஷ்டத்தையும், புகழையும் தரக்கூடிய யோகம் என ஜோதிட சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. 

உபயசாரி யோகம் உள்ளவர்களுக்கு பின்வரும் நன்மைகள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது 

  • நீடித்த ஆயுள்
  • செல்வம்
  • புகழ்
  • பதவி உயர்வு
  • அரசாங்க வேலை
  • கலை, இலக்கியம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் புகழ்  உள்ளிட்டவை கிடைக்கும். 

உபயசாரி யோகம் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற மிகவும் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தங்களின் கடின உழைப்பாலும், திறமையாலும் தங்கள் இலக்குகளை அடைய முடியும்.

இதுவே ஒருவரது ஜாதகத்தில் சூரியனுக்கு இருபுறமும் அசுப கிரகங்கள் என அழைக்கப்படும் செவ்வாய், சனி இருந்தால் அது அசுப உபயசாரி யோகம் எனப்படுகிறது. இந்த யோகம் இருந்தால் நல்ல பலன்கள் ஏற்படாது. ஜாதகர் ஏழையாக இருப்பார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்