Aadi Amavasai 2024: லட்சுமி தேவியின் அருள் பெறும் ஆடி அமாவாசை.. வறுமை ஓடிவிடும்.. அதிர்ஷ்டம் தேடி வரும்..
Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை அன்று லட்சுமி தேவியை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆடி மாத அமாவாசை தினத்தன்று சில நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பணத்தின் வறுமையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Aadi Amavasai 2024: ஆடி மாதம் கடவுளின் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து நாட்களுமே சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆடி அமாவாசை திருநாள் கொண்டாடப் படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
ஆடி அமாவாசை பரிகாரம்
ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆடி அமாவாசை விரதம் அனுசரிக்கப்படும். ஆடி அமாவாசை ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில், ஆகஸ்ட் மாத அமாவாசை ஹரியாலி மற்றும் ஆடி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாத அமாவாசை தினத்தன்று சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார நிலைமையை மேம்படுத்தலாம். எனவே, நீங்களும் வறுமையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தைப் பெற, ஆடி அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரங்களை செய்யுங்கள் நல்ல பலன்களை பெற்றுச் செல்லுங்கள்.
செய்ய வேண்டிய வழிபாடுகள்
- ஆடி அமாவாசை நாளில் வீட்டின் வடகிழக்கு மூலையில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்கு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை ஏற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- ஆடி அமாவாசை திருநாளில் பசுவுக்கு சேவை செய்யுங்கள் அது வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகப்படுத்தும். இந்த நாளிலும் கால்நடைகளுக்கு எந்த சிக்கல்களும் கொடுக்கக்கூடாது
- மாலையில் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபட்டால் லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
- காலையில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்.
- இந்த நாளில் துளசி மாலையால் காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் உங்கள் பொருளாதார நிலையை பெருகும்.
- உங்கள் வீட்டை துடைத்து சுத்தம் வைத்தால் உங்கள் வீட்டின் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகும்.
- அடிஅமாவாசை நாளில், 2 தானியங்கள், குங்குமப்பூ மற்றும் கிராம்புகளை நெய் விளக்கில் போட்டு எரிப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும், நிதி தடைகளை நீக்கவும் உதவுகிறது.
முன்னோர்களை மகிழ்விக்கவும், மூதாதையர் தோஷத்திலிருந்து விடுதலை பெறவும் அமாவாசை நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த நாளில் தான தர்மங்கள் மற்றும் நல்ல் செயல்கள் செய்து முன்னோர்களை மகிழ்ச்சியச் செய்யலாம். எனவே, ஏழைகளுக்கு ஆடைகள், பழங்கள் போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
அதே நேரத்தில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, தெற்கு திசையில் கடுகு எண்ணெயில் கருப்பு எள் போட்டு தீபம் ஏற்றவும். இந்த நாளில் பித்ரு ஸ்தோத்திரம் மற்றும் பித்ரு கவச் பாராயணம் செய்வது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைத் தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
