HT Yatra: மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. சாட்டையால் அடித்த மன்னன்.. காரணம் ஆத்மநாதர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. சாட்டையால் அடித்த மன்னன்.. காரணம் ஆத்மநாதர்

HT Yatra: மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. சாட்டையால் அடித்த மன்னன்.. காரணம் ஆத்மநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 23, 2024 07:00 AM IST

HT Yatra: மன்னர்கள் அனைவரும் கலைநயத்தோடு மிகப் பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்.

மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. சாட்டையால் அடித்த மன்னன்.. காரணம் ஆத்மநாதர்
மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்.. சாட்டையால் அடித்த மன்னன்.. காரணம் ஆத்மநாதர்

இது போன்ற போட்டோக்கள்

மன்னர்கள் காலம் தொடங்கி தற்போது வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. நாட்டுக்காக எத்தனையோ மன்னர்கள் போரிட்டு வந்துள்ளனர். அத்தனை மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாண்டியர்கள் சோழர்கள் இருவரும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் இவர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மன்னர்கள் அனைவரும் கலைநயத்தோடு மிகப் பெரிய கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் ஆத்மநாதர் எனவும் தாயார் யோகாம்பாள் என்று திருநாமத்தோடு பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகின்றனர். இந்த திருக்கோயில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கோயிலில் இருக்கக்கூடிய மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் விடப்பட்டது போல தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாறைகளால் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் இந்த கோயிலில் இருக்கக்கூடிய தியாகராஜ மண்டபத்தில் கல் சங்கிலிகள் உள்ளன. மேலும் சப்தஸ்வர தூண்கள் பஞ்சாட்சர மண்டபத்தில் காணப்படுகிறது. குறிப்பாக கலைநயத்தை வெளிப்படுத்தும் படி இரண்டு தூண்களில் ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டது போல காட்சி கொடுப்பது இவர்களின் கலைநயத்தை வெளிப்படுத்துகிறது.

தல வரலாறு

மாணிக்கவாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையின் அமைச்சராக இருந்தார். ஒரு குதிரை வாங்கி வரும்படி மன்னர் மாணிக்கவாசர்களிடம் உத்தரவிட்டார். குதிரை வாங்குவதற்காக மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை வந்தார்.

அப்போது இவருக்கு சிவாகாமங்கள் ஒலிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு மாணிக்கவாசகர் அங்கு சென்று பார்க்கையில் ஞான குருநாதர் ஒருவர் இருப்பதை கண்டார். தனக்கும் இது குறித்து போதிக்கும்படி அவரிடம் மாணிக்கவாசகர் கேட்டுக்கொண்டார். அந்த குரு அதனை ஒப்புக்கொண்டார்.

அப்படியே கண்களை மூடி சிருஷ்டியில் இருந்த மாணிக்கவாசகர் கண்களை திறந்து பார்த்தபோது அங்கே குருவை காணவில்லை. குருவாக வந்தது சிவபெருமான் தான் என மாணிக்கவாசகர் அறிந்து கொண்டார். குதிரை வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு வந்த பணத்தில் அங்கே ஒரு கோயிலை கட்டினார். அதற்குப் பிறகு சிவ தொண்டில் ஈடுபட்டார்.

குதிரை வாங்கி வராத காரணத்தினால் மாணிக்கவாசகர் மன்னனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப் பிறகு சிவபெருமான் நரிகளை குதிரையாக மாற்றி அதனை ஓட்டிக்கொண்டு வந்து மதுரை மன்னனிடம் கொடுத்தார். அதற்குப் பிறகு இரவு நேரங்களில் அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறின.

இதனால் மாணிக்கவாசகரின் நடு வைகை ஆற்றில் சுடுமணலில் மன்னர் நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் வைகை முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கரையை அடைப்பதற்காக கூலி ஆளாக சிவபெருமான் அங்கே வந்தார்.

அதன் பின்னர் பிட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு வேலை செய்யாத காரணத்தினால் பெறம்படி கொடுக்கப்பட்டது. சிவபெருமானை அடிக்கடிக்கு அனைத்து அடிகளும் அனைவரின் முதுகிலும் விழுந்து உள்ளது. வந்திருப்பது இறைவன் தான் என மன்னன் உணர்ந்து விட்டார். அதன் பின்னர் மன்னர் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்படிப்பட்ட சம்பவம் நடப்பதற்கு இந்த கோயில்தான் காரணம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9