தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: சிறுவனின் கண்ணில் பட்ட லிங்கம்.. தானாக தோன்றிய மகாலிங்கேஸ்வரர்.. ஊர் மக்கள் கண்டுபிடித்த கோயில்

HT Yatra: சிறுவனின் கண்ணில் பட்ட லிங்கம்.. தானாக தோன்றிய மகாலிங்கேஸ்வரர்.. ஊர் மக்கள் கண்டுபிடித்த கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 24, 2024 06:00 AM IST

HT Yatra: ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்றுவரை வரலாற்றின் கம்பீரமாக நின்று வருகிறது. அப்படி எத்தனையோ கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்காடு அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

சிறுவனின் கண்ணில் பட்ட லிங்கம்.. தானாக தோன்றிய மகாலிங்கேஸ்வரர்.. ஊர் மக்கள் கண்டுபிடித்த கோயில்
சிறுவனின் கண்ணில் பட்ட லிங்கம்.. தானாக தோன்றிய மகாலிங்கேஸ்வரர்.. ஊர் மக்கள் கண்டுபிடித்த கோயில்

HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டவர் சிவபெருமான். தனக்கென சுய உருவம் இல்லாமல் எங்க திருமேனியில் உலகம் எங்கும் காட்சி கொடுத்த வருகிறார். குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு என தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு என தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு என்ன கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மன்னர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைத்து மக்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக விளங்கி வருகின்றார். இன்று வரை எத்தனையோ கோயில்கள் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாமல் வரலாறுகள் கடந்து கம்பீரமாக நின்று வருகின்றன.

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அமைத்து ராஜனுக்கெல்லாம் ராஜனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்றுவரை வரலாற்றின் கம்பீரமாக நின்று வருகிறது. அப்படி எத்தனையோ கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்காடு அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த கோயில் பல்லவ மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிற்பங்களின் கலை நயங்கள் அனைத்தும் பல்லவர் காலத்தைச் சேர்ந்த என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கம்பவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல கலை நுட்பங்களுடன் இந்த கோயில் செதுக்கப்பட்டு கம்பீரமாக இன்று வரை பொதுமக்களின் பார்வையில் சிறந்த நிற்கின்றன.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடியும் வரை தீபம் எரிவதற்காக அணையா தீபம் ஒன்றை பல்லவ மன்னன் கம்பவர்மன் கொடுத்துள்ளார். தடையில்லாமல் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காகவே அந்த மன்னன் இந்த தீபத்தை கொடுத்துள்ளார்.

தல வரலாறு

காஞ்சி மாநகரத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் பொழுது புகழ்பெற்ற கூட்டமாக இந்த ஊத்துக்காடு விளங்கி வந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஊத்துக்காடு குறித்து அந்த கல்வெட்டுகளில் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கையில் வழுவழுப்பான ஏதோ ஒன்று தெளிவுபட்டுள்ளது. ஒரு குச்சி வைத்து அதனை தோண்டி பார்க்கும்பொழுது ஒரு அழகான பாண லிங்கம் அவருடைய கண்களில் தென்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுவர்கள் தங்களுடைய மூத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கண்ட முன்னோர்கள் திடீரென ஓம் நமசிவாய என கோசமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு அனைவரிடமும் இந்த செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் இருக்கும் அனைவரும் இந்த இடத்திற்கு வந்து அனைத்தையும் சுற்றி பார்த்து உள்ளனர். அதற்குப் பிறகு இந்த இடத்தில் மகா மண்டபம், பிரகாரம், சிவபெருமானின் லிங்கத் திருமேனி, நந்தி, காலபைரவர், ஒரு சில கல்வெட்டுகள் என அனைத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்குப் பிறகு சிவபெருமானுக்கு தனி வஸ்திரம் அணிவித்து பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தியுள்ளனர். இவர்களை எப்படி அழைப்பது என்பது தெரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருந்தனர். உடலில் இது குறித்து முன்னோர்கள் வெகு நாட்களாக மண்ணில் புதைந்திருந்த காரணத்தினால் சிவபெருமான் மகாலிங்கேஸ்வரர் எனவும் அம்மன் பெரியநாயகி எனவும் அழைக்க வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். இப்படியே இவர்களுக்கு இந்த திருநாமம் கொடுக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9