தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: திடீர் அதிர்ஷ்டம், பணத்தேவைக்கு குறை இருக்காது! புனர்பூசம் நட்சத்திரத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: திடீர் அதிர்ஷ்டம், பணத்தேவைக்கு குறை இருக்காது! புனர்பூசம் நட்சத்திரத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 11:00 PM IST

புனர்பூசம் 1,2,3 பாதம் மிதுன ராசியிலும், நான்காவது பாதம் கடக ராசியிலும் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரனருக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி புனர்பூசிம் நட்ச்சத்திரனருக்கான பலன்கள்
குருப்பெயர்ச்சி புனர்பூசிம் நட்ச்சத்திரனருக்கான பலன்கள்

குரு பெயர்ச்சியால் புனர்பூசம் நட்சத்தினர் பெறும் பலன்கள்

குருபகவானின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாக உள்ளது. குரு பகவான் இருக்கும் நட்சத்திரமாக இருப்பதால் தெய்வ அனுகூலம் கிடைக்கும்.

சனி திசையில் இருப்பவர்களுக்கு படிப்பில் எந்த தடையும் இருக்காது. பொருளாதார ரீதியாக எந்த பிரச்னையும் இருக்காது. நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்தால் பலன் கிடைக்கும். கடன் பிரச்னையை சமாளிப்பீர்கள். அதே சமயம் பணத்தேவைக்கு பிரச்னை வராது.

புதன் திசையில் இருப்பவர்கள் நன்மையே கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்னைகள் அகவலும், கணவன் - மனைவி இடையே இருந்து கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

கேது திசையில் இருப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். சுக்கிர திசையில் இருப்பவர்களுக்கு சுப விரயங்கள் ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். சொந்த தொழில் செய்வோர் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அமையும். பிள்ளைகளுக்கு தேவையான வளர்ச்சியை கொடுக்கும். சூரிய திசையில் இருப்பவர்களுக்கு வாரிசுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதர வழியில் ஒற்றுமை இருக்கும்.

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பூர்வீக சொத்து விஷயத்தில் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக உள்ளது. வேலை செய்வோர் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், அங்கீகாரமும் பெறுவீர்கள். செய்யும் வேலையிலும் முன்னேற்றம் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வழக்குகள் அனைத்தும் சாதமாக அமையும். எதிரிகளை வீழ்த்தி வீறுநடை போடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

குரு பெயர்ச்சியால் கடக ராசியில் இருக்கும் புனர்பூசம் நட்சத்தினர் நான்காம் பாதம் பெறும் பலன்கள்

கடக ராசியில் இருக்கும் புனர்பூசம் நட்சத்திரம் குருவோடு நட்சத்திரமாக இருந்து வருகிறது. சனி திசை நடக்கும் நபர்கள், தடைகள் நீங்கி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதன் திசை நடக்கும் நபர்களுக்கு தகுதிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வு கிடைக்கும். வருமானத்தில் குறை இருக்காது. கடன் பிரச்னை தீரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தடை, தாமதம் ஏற்படலாம். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கிடைக்கும்.

கேது திசையில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அமையலாம். தொழில் ரீதியான வளர்ச்சிகளை கொடுக்கும். சுக்கிர திசையில் இருப்பவர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சி உண்டு. குரு பார்வை நன்மை தருவதாக இருப்பதால் எடுத்த காரியங்களில் முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த நெருக்கடிகள் அகலும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும். சொத்து சேர்க்கை உண்டு

சூரிய திசையில் இருப்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உணவு பழக்கவழக்களில் கவனமுடன் இருக்கவும். சந்திர திசையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்