Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் உறங்கும் கிரகங்கள் யார் என்று தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் உறங்கும் கிரகங்கள் யார் என்று தெரியுமா?

Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் உறங்கும் கிரகங்கள் யார் என்று தெரியுமா?

Kathiravan V HT Tamil
Jan 19, 2025 05:54 PM IST

உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் தசை நடத்தி முடிந்துவிட்டது என்றால், அந்த கிரகம் உறக்க நிலைக்கு சென்றுவிடும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. ஒரு தசாநாதன் ஒரு ஜாதகத்தின் மேல் நூறு சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர்.

Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் உறங்கும் கிரகங்கள் யார் என்று தெரியுமா?
Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் உறங்கும் கிரகங்கள் யார் என்று தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

ஒரு தசையில் 9 புத்திகள் வரும் என்பது ஜோதிட விதியாக உள்ளது. ஆனாலும் அதில் தசாநாதனே அதில் முக்கிய தாக்கம் செலுத்தும் கிரகமாக உள்ளது. இதில் தசாநாதன் சொல்லும் வேலையையே புத்திநாதர்கள் செய்வார்கள். 

உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் தசை நடத்தி முடிந்துவிட்டது என்றால், அந்த கிரகம் உறக்க நிலைக்கு சென்றுவிடும் என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. ஒரு தசாநாதன் ஒரு ஜாதகத்தின் மேல் நூறு சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர். அதிலும் பாவக் கோள்களின் தசை எப்போதும் வலிமையாக இருக்கும். பாவக்கோள்கள் உடன் ஒப்பீடு செய்யும் போது சுபக்கோள்களின் தசாக்காலத்தில் அதன் சக்தி சற்றுகுறைவாகவே இருக்கும். 

உதாரணமாக சிம்மம் ராசி, மகம் நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இவருக்கு 4ஆண்டுகாலம் கேது திசை பிறக்கும் போதே தொடங்கும். 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் ஜாதகத்தில் கேது உறக்கநிலைக்கு சென்றுவிடுவார். இந்த காலத்தில் ராகு கேது தோஷம் உள்ளிட்டவைகளால் பாதிப்புகள் ஏற்படாது. பிற தசைகளின் காலத்தில் வரும் கேது புத்திக்காலத்திலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு உறங்கும் கிரகங்களின் தாக்கம் இருக்காது. 

அதே போல் சூரியன் உடன் மிக அருகில் சேர்ந்து உள்ள கிரகங்களும் அஸ்தமானம் ஆன கிரகங்களும் உறக்க நிலைக்கு சென்றுவிடும். மேலும் ராகு மற்றும் கேது கிரகங்களால் கிரகணப்படுத்தப்பட்ட கிரகங்களும் உறக்க நிலைக்கு சென்றுவிடும். 

ஒரு ஜாதகருக்கு 12 வயதுக்கு மேல் தொடங்கி 4 திசைகள் மட்டும்தான் தாக்கம் செலுத்துவதாக இருக்கும். கல்வி, திருமணம், பணி, புத்திரப்பாக்கியம், சொத்து, சுகம் உள்ளிட்ட அமைப்புகளை இந்த கிரகங்கள் உண்டாக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner