Puthayal Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் புதையல் யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Puthayal Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் புதையல் யோகம் யாருக்கு?

Puthayal Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் புதையல் யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Feb 06, 2024 01:37 PM IST

”Astrology: பாக்கிய ஸ்தானாதிபதி என்று சொல்லகூடிய ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புதையலுக்கு நிகரான செல்வம் கிடைக்ககூடிய பெரும் பணம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது.”

புதையல் யோகம்
புதையல் யோகம்

எந்த ராசிக்காரராக இருந்தாலும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 11ஆம் வீட்டுக்கு அதிபதி லக்ன ஸ்தானத்திலும், லக்னாதிபதி 2ஆம் இடமான தன ஸ்தானத்திலும், 2ஆம் வீட்டுக்கு அதிபதி 11ஆம் வீட்டிலும் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புதையல் யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

அதாவது புதையல் யோகம் என்று சொன்னால் யாரும் எதிர்பாராத வகையில் பெருஞ் செல்வத்தை அடைவார் என பொருள் கொள்ளலாம் என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

இந்த யோகம் கொண்டவர்களுக்கு பூமியில் இருந்துதான் புதையல் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. புதையலுக்கு நிகரான மதிப்பு உடைய பெரும் தொகை ஏதாவது ஒரு வகையில் கிடைத்தாலும் அது புதையல் யோகமாகவே கருதப்படும். 

லாட்டரி, குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றில் பணம் கிடைப்பது கூட இந்த புதையல் யோகத்தில் அடங்கும். 

மேலும் ஒருவரது ஜாதகத்தில் 10ஆம் இடத்திற்கு உரியவனும், 11ஆம் இடத்திற்கு உரியவனும் சேர்ந்து, 4ஆவது இடத்தில் இருந்தாலும் இந்த புதையல் யோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

பாக்கிய ஸ்தானாதிபதி என்று சொல்லகூடிய ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புதையலுக்கு நிகரான செல்வம் கிடைக்ககூடிய பெரும் பணம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்