தமிழ் செய்திகள்  /  Astrology  /  Understanding The Role Of Lust In Astrology Horoscopes

Lust in Astrology: ’காம உணர்வு அதிகம் உள்ள ஜாதகர்கள் இவர்கள்தான்!’ ஜோதிடர்கள் சொல்லும் ரகசியம்!

Kathiravan V HT Tamil
Apr 02, 2024 04:03 PM IST

”ரத்தத்திற்கு காரகனான செவ்வாய் பகவான் மற்றும் ஸ்னோகிதத்திற்குகாரகனான சுக்கிரன் கேந்திரமாக இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளிப்படையாக தெரியும் ஆனால், அதே செவ்வாயோ அல்லது சுக்கிரனோ பெண் ராசியில் இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளியில் தெரியாது”

ஜோதிடத்தின் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் பார்வைகளுக்கு ஏற்ப ஜாதகர் ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதிடத்தின் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் பார்வைகளுக்கு ஏற்ப ஜாதகர் ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஜோதிடத்தின் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் பார்வைகளுக்கு ஏற்ப ஜாதகர் ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்ற்னார்.  

ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது ஜாதகத்தில் ராசி என்பது உடலாகவும், லக்னம் என்பது உயிராகவும் கருதப்படுகிறது. ஒருவரது லக்னம்தான் எண்ண அலைகளை ஏற்படுத்துக்கிறது என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது. 

ஜாதகர் ஒருவருக்கு காம உணர்வு அதிகம் ஏற்படுவதற்கு உடல் சூடு அதிகம் ஆவதே காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே உஷ்ணத்தை உருவாக்கும் கிரகங்களாக சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒருவருக்கு காம எண்ணங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஒரு ஜாதகர் சூரிய பகவானின் ராசியோ அல்லது சூரியனின் லக்னமோ, செவ்வாய் பகவானின் ராசியோ அல்லது லக்னமோ, சுக்கிர பகவானின் ராசியோ அல்லது லக்னமோ அமைந்துவிட்டால் அவர்களுக்கு காம எண்ணங்கள் சற்று கூடுதலாக இருக்கும். 

சந்திரனின் லக்னம் மற்றும் ராசியாக கடகம் உள்ளது. குருவின் லக்னம் மற்றும் ராசியாக தனுசு மற்றும் மீனம் உள்ளது. இவர்களுக்கு கண்டிப்பாக அதிக காம உணர்வுகள் இருக்கும் ஆனால் அவர்கள் அதை பொது வெளியில் பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். 

புதனின் லக்னம் மற்றும் ராசிகள், சனி பகவானின் லக்னம் மற்றும் ராசிகளுக்கு காம உணர்வு இருதாலும் அது ஓரளவு கட்டுப்பாடோடு இருக்கும் என்பதால் இது வெளியில் தெரியாது. அதனை வெளிப்படுத்தவும் மாட்டார்கள். 

ரத்தத்திற்கு காரகனான செவ்வாய் பகவான் மற்றும் ஸ்னோகிதத்திற்குகாரகனான சுக்கிரன் கேந்திரமாக இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளிப்படையாக தெரியும் ஆனால், அதே செவ்வாயோ அல்லது சுக்கிரனோ பெண் ராசியில் இருந்தால் ஜாதகர் கொண்டிருக்கும் காம உணர்வு வெளியில் தெரியாது. 

குரு பகவானுக்கும், சுக்கிரனுக்கும் திரிகோண அமைப்பு இருந்தால் கண்டிப்பாக காம உணர்வுகள் நிச்சயம் அதிகமாக இருக்கும், ஆனாலும் அது கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுக்கிரனுக்கு 12ஆம் இடத்தில் புதன் இருந்தால் கண்டிப்பாக காம உணர்வுகள் அதிகமாக இருக்கும். 

ஒருவரது ஜாதகத்தில் போககாரகன் ஆன ராகு பகவானுக்கு அஷ்டங்க தோஷம் பெறாத சுக்கிரன் உடனான தொடர்பு ஏற்பட்டால் அதிபயங்கர காம உணர்வு ஏற்படும் நிலையை அந்த ஜாதகர் பெறுவார்.

மேற்கண்ட கிரக அமைப்புகள் நீர் ராசியுடன் தொடர்பு இருந்தால் காம எண்ணங்கள் குறைந்துவிடும். எடுத்துக்காட்டாக நெருப்புக்காரகனான செவ்வாய் நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனம் ராசியில் இருந்தால் அவரது பலம் குறைந்துவிடும். ஆனால் அதற்கு மாற்றாக மேஷம், சிம்மம், தனுசு, துலாம், மிதுனத்தில் இருந்தால் செவ்வாயில் பலம் முழுமையாக இருக்கும்.  அதே போல் ஒருவரது ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் ஒன்றாக இருந்தால் காம உணர்வுகள் கூடுதலாக இருக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்