தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Parijadha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?

Parijadha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 06:30 AM IST

மன்னர்களும் தலை வணங்கும் நிலைக்கு ஜாதகரை கொண்டுபோய்விடும் ஆற்றலை இந்த பாரிஜாத யோகம் தருகிறது. மதம், இனம் சார்ந்து செயல்படுபவர்களுக்கு மாபெரும் வெற்றியை தரும் யோகமாக உள்ளது.

Parijadha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?
Parijadha Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

பாரிஜாத யோகம் என்றால் என்ன?

உங்கள் லக்னாதிபதி எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறாரோ, அந்த வீட்டு அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி ஆட்சியாகவோ உச்சமாகவோ இருக்க வேண்டும்.