Suba vesi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?
Suba Vesi Yogam: புகழ் என்றாலே அது சூரியனை குறிக்கும். ஒரு மனிதனை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய கிரகமாக சூரியன் உள்ளது. சூரியன் மூலம் கிடைக்கும் யோகங்களில் ஒன்றாக இந்த வேசி யோகம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஆத்மகாரகன், சம்பாத்யகாரகனாக சூரிய பகவான் விளங்குகிறார்.
புகழை கொடுக்கும் சூரிய பகவான்
புகழ் என்றாலே அது சூரியனை குறிக்கும். ஒரு மனிதனை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய கிரகமாக சூரியன் உள்ளது. சூரியன் மூலம் கிடைக்கும் யோகங்களில் ஒன்றாக இந்த வேசி யோகம் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் ஆத்மகாரகன், சம்பாத்யகாரகனாக சூரிய பகவான் விளங்குகிறார்.
ஒருவர் நன்றாக சம்பாதிக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
சுபவேசி யோகம் எப்படி உண்டாகிறது.
ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் சுபகிரகங்கள் அமர பெறுவது சுபவேசி யோகம் என குறிக்கப்படுகிறது. இந்த சுபகிரகங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
சுபகிரகங்களான புதன், சுக்கிரன், குரு ஆகிய மூன்று கிரகங்களுக்கும், இரண்டு ஆட்சி வீடுகளும், ஒரு உச்ச வீடுகளும் உள்ளன.
உதரணமாக மேஷம் ராசியில் சூரியன் உள்ளபோது உச்சம் பெறுகிறார். அவ்வாறு உச்சம் பெற்ற சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தால் அது சுப வேசி யோகம் என அழைக்கப்படுகின்றது.
வேசி யோகம் அமைந்தால் ஒருவர் இரவா புகழை அடைகிறார். எந்த துறையை எடுத்தாலும், அதில் சாதனையாளராக வரக்கூடியவர்களாக இந்த ஜாதகர்கள் இருப்பார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து, சமுதாயத்திற்கு நன்மைகள் செய்யும் புகழ்பெற்ற நபர்களாக இவர்கள் இருப்பார்கள்.
வேசி யோகம் என்பது சுப வேசி யோகம், பாவ வேசி யோகம், சுப பாவ வேசி யோகம் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
வீடு வாரியாக சுபவேசி யோகம் ஏற்படும் நிலைகள்
மேஷத்தில் சூரியன் இருந்து, ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும் போது, புதன், குரு இணைவோ அல்லது பார்வயோ கிடைத்தால் அற்புதமான சுபவேசி யோகத்தை ஏற்படுத்தும்.
ரிஷபத்தில் சூரியனும், மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்று குரு, சுக்கிரன் அமைந்தாலும் சுபவேசி யோகம் ஏற்படும்.
மிதுனத்தில் சூரியனும், கடகத்தில் குருவும் உச்சம் பெற்று இருந்தால், சுபவேசி யோகம் உண்டாகும்.
கடகத்தில் சூரியனும், சிம்மத்தில் சுபகிரகங்கள் ஆட்சி பெற்று இருந்தால் சுபவேசி யோகம் உண்டாகும்.
சிம்மத்தில் சூரியன் இருந்து, கன்னியில் புதன் உச்சம் பெற்ற நிலையில் இருந்தாலும் சுபவேசி யோகம் உண்டாகும்.
கன்னியில் சூரியனும், துலாமில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்து, புதன் அல்லது குருவோடு தொடர்பில் இருந்தலும் சுபவேசி யோகம் உண்டாகும்.
துலாமில் சூரியனும், விருச்சிகம் ராசியில் சுக்கிரன், குருவின் இணைவு, புதன் இருப்பு இருந்தாலும் சுபவேசி யோகம் உண்டாகும்.
விருச்சிகத்தில் சூரியன் இருக்க, தனுசில் குரு ஆட்சி பெற்று சுக்கிரன் உடன் இருந்தால் சுபவேசி யோகம் ஏற்படும்.
தனுசில் சூரியனும், மகரத்தில் சுக்கிரன், புதன், குரு அமர்வது சுபவேசி யோகம் ஏற்படும்.
மகரத்தில் சூரியன் இருக்க, கும்பத்தில் சுக்கிரன், புதன் இணைவு, மற்றும் குரு பார்வை சுபவேசி யோகம் உண்டாகும்.
கும்பத்தில் சூரியன் இருக்க, மீனத்தில் குரு ஆட்சி அல்லது சுக்கிரன் உச்சம் பெற்றாலும் சுபவேசி யோகம் உண்டாகும்.
மீனத்தில் சூரியன் இருக்கும் போது, மேஷத்தில் சுக்கிரன், புதன் இணைவு சுபவேசி யோகத்தை உண்டாக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.