Guru Chandala Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ கோதாவில் குதிக்க வைக்கும் குரு சண்டாள யோகம்!
“Guru Chandala Yogam: இந்த யோகம் சுயபரிசோதனை மற்றும் சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கும், இது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பரிணாமத்திற்கு வழிவகுக்கும்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் குரு சண்டாள யோகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானும், ராகு பகவானும் சேர்ந்து இருப்பது குரு சண்டாள யோகம் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் உடன் சனி பகவான் சேர்ந்தாலும் குரு சண்டாள யோகம் உண்டகும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மேலும் குரு பகவானை சனி பார்த்தாலும் குரு சண்டாள யோகம் உண்டு ஏற்படுகிறது.
குரு பகவான் பாரம்பரியமாக ஞானம், அறிவு, ஆன்மீகம் உள்ளிட்ட சிந்தனைகளை தரும் நன்மையின் கிரகமாக விளங்குகிறார். ஒருவர் தான் பெற்றுள்ள ஞானம், சமயம், மற்றும் ஒழுக்கத்தை பிரதிபலிப்பதாக இது அமையும்.
ராகு பகவான் ஒரு நிழல் கிரகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ராகுவின் தன்மைகள் ஆசைகள், மாயை மற்றும் பொருள் முதல் வாதத்துடன் தொடர்புடையது. இது ஜாதகருக்கு தொல்லைகளையும் ஆசைகளையும் உருவாக்கலாம்.
ராகு அதன் சீர்குலைக்கும் மற்றும் தீவிர ஆற்றலுக்கு பெயர் பெற்றது. இது ஜாதகரின் வாழ்கையில் எதிர்பாராத மற்றும் ஒழுங்கற்ற நடத்தைக்கு வழிவகுக்கும்.
இந்த சேர்க்கையானது உள் மோதலின் உணர்வை உருவாக்கும். அங்கு நபர் ஒரே நேரத்தில் ஆன்மீக நோக்கங்களையும் அதே நேரத்தில் பொருள் ஆசைகள் இரண்டையும் நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
உயர் அறிவைப் பெறுவதற்கும் உலக இன்பங்களில் ஈடுபடுவதற்கும் இடையே இவர்களுக்கு பெரும் போராட்டம் நீடிக்கும். இந்த யோகம் சுய பரிசோதனை மற்றும் சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கும். இது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பரிணாமத்திற்கு வழிவகுக்கும்.
டாபிக்ஸ்