உடல் நல பாதிப்பு..! கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் இதோ
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  உடல் நல பாதிப்பு..! கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் இதோ

உடல் நல பாதிப்பு..! கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 28, 2025 04:38 PM IST

நேர்மறையான ஆற்றலை பெறவும், உடல்நலப் பிரச்னைகள், கடன் பிரச்னைகள் போன்ற பாதிப்பில் இருப்பவர்கள் சில வாஸ்து குறிப்புகளை முறையாக பின்னபற்றினால் அதிலிருந்து விடுபடலாம்.

கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் இதோ
கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் எளிய வாஸ்து பரிகாரங்கள் இதோ (pinterest)

இது போன்ற போட்டோக்கள்

அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கவும், பிரச்னைகளால் எந்த பாதிப்பையும் சந்திக்கால் தவிர்க்கவும் முறையாக வாஸ்துவை பின்பற்றுவதன் மூலம் பலன் பெறலாம். வாஸ்துவை சரியாக கடைப்பிடித்தால் நேர்மறை ஆற்றலை பெறலாம்

வீட்டில் உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் சரி, கடன் பிரச்னைகள் இருந்தாலும் சரி, சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள், இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள செய்கிறது.

கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட விரும்பினாலும் சரி, உடல்நலப் பிரச்சினைகள் வராமல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினாலும் சரி, இந்த தவறுகளைச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாஸ்துவின் படி உடல்நல பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

தெற்கு திசை என்பது எமனின் திசை ஆகும். தவறுதலாக கூட இந்த திசையில் படுக்கையை வைக்காதீர்கள். தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவதும் நல்லதல்ல. தெற்கு நோக்கி தலை வைத்து தூங்கினால், தலைவலி, கால் வலி போன்ற உடல்நல பிரச்சினைகள் வரலாம். எனவே, இந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல.

வீட்டில் நல்ல காற்று மற்றும் வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். இல்லையெனில், உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்படும்.

கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட வழிகள்

படிக்கட்டுகள்: கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட விரும்பினால், வீட்டின் மேற்கு திசையில் படிக்கட்டுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால், எதிர்மறை ஆற்றல் பாயும். கடன் பிரச்னையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அடுப்பு: வாஸ்து படி, வீட்டில் அடுப்பு அல்லது சிலிண்டர் கிழக்கு திசையில் வைக்கப்பட வேண்டும். அப்படியானால், வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். செழிப்பும் மகிழ்ச்சியும் இருக்கும்.

செவ்வாய்க்கிழமை கடனை அடைக்கவும்: நீங்கள் கடன் வாங்கி யாருக்காவது பணம் கொடுக்க விரும்பினால், செவ்வாய்க்கிழமை முதல் தவணையை செலுத்த முயற்சி செய்யுங்கள். வாஸ்துவின் படி, இதைச் செய்வதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் ஆசிர்வாதத்தால் உங்கள் கடன்களை விரைவாக அடைக்கலாம்.

துளசி செடி: துளசி செடி லட்சுமி தேவியாகக் கருதப்படுகிறது. வீட்டில் தினமும் துளசி செடியை வழிபடுவதன் மூலம், நிதிப் பிரச்னைகள் இருக்காது. உங்களிடம் பண புழக்கம் இருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்