தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Transiting To Krittikai: கிருத்திகை நட்சத்திரத்தில் பெயரும் சுக்கிரன்.. நகை சேர்க்கப்போகும் ராசிகள்

Venus Transiting To Krittikai: கிருத்திகை நட்சத்திரத்தில் பெயரும் சுக்கிரன்.. நகை சேர்க்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
May 11, 2024 07:26 PM IST

Venus Transiting To Krittikai:கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கப்போவதால் நல்ல செல்வம், ஈர்ப்பு மற்றும் அன்பினைப்பெறப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Venus Transiting To Krittikai: கிருத்திகை நட்சத்திரத்தில் பெயரும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தால் வருவாய் கூடும் ராசிகள்
Venus Transiting To Krittikai: கிருத்திகை நட்சத்திரத்தில் பெயரும் சுக்கிரன்.. அதிர்ஷ்டத்தால் வருவாய் கூடும் ராசிகள்

சுக்கிரன் செல்வம், ஈர்ப்பு மற்றும் அன்புக்கு காரணம். வேத ஜோதிடத்தின்படி, இன்றிலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் மே 16 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் விளைவாக, பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள். இதன் விளைவாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

சுக்கிர பகவான் தற்போது பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார். இதற்குப் பிறகு சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதன் விளைவாக, பல ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தைக் காணப் போகிறார்கள். சுக்கிரன் மே 27 வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். எந்த ராசிக்காரர்கள் லாபத்தின் முகத்தை பார்க்கப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

கடகம்: 

தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் கடின உழைப்பின் பலனை இந்த நேரத்தில் பெறுவீர்கள். சந்தோஷம் பல வழிகளில் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் பாராட்டு அலுவலகத்தில் மட்டுமல்ல, ஒரு பெரிய பண போனஸுடன் வரும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமண உறவில் அன்பு வளரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுக்கிரனின் அருளாசியால், இக்காலத்தில் கிடைக்கும் பணம் ஒவ்வொன்றையும் சேமிப்பாக மாற்றமுயலுங்கள்.

கன்னி: 

எந்த ஒரு வேலையும் நீண்ட நாட்கள் தடைபட்டிருந்தால், அதன்மூலம் லாபம் கிடைக்கும். இதன் விளைவாக உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பண வேதனையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் பெற்ற கடனை இந்த காலத்தில் அடைப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் மேலாளர் உங்கள் மீது ஒரு நல்ல மதிப்பு வைத்திருப்பார். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய திட்டங்கள் ஜெயமாகும். நீண்ட நாள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு: 

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். உடல் ரீதியான மகிழ்ச்சி கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் செல்வம் சேர வாய்ப்புகள் அமையும். வேலை காரணமாக நீண்ட தூரப்பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் எந்தவொரு தொழிலையும் தொடங்குவது மிகவும் மங்களகரமானது. வாழ்க்கைத் துணையுடனான அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் குழந்தையிடமிருந்து, சில நல்ல செய்திகளைப் பெறலாம். எதிரிகள் கூட நண்பர்கள் ஆவர். இதற்கு முன் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு, இந்த காலத்தில் பயன் அடைவீர்கள். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்