தமிழ் செய்திகள்  /  Astrology  /  Transit Of Venus Will Bring Luck To Major Zodiac Signs

March Luck: உச்சத்தில் நிற்க போகும் சுக்கிரன்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 10:43 AM IST

சுக்கிரனின் பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரன் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 7ஆம் தேதியன்று கும்ப ராசியில் இடம் மாறுகிறார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஒரு மார்ச் 30 ஆம் தேதி வரை கும்ப ராசியில் பயணம் செய்வார். இங்கு ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.

பொதுவாக நவகிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்களை கொடுக்கும். இந்நிலையில் சில ராசிகள் சுக்கிர பகவானால் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

 

சுக்கிர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்ய போகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. இது மிகவும் உங்களுக்கு சாதகமான காலமாக அமையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வருமானம் அதிகரிக்க கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

துலாம் ராசி

 

சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

கும்ப ராசியில் சுக்கிரன் இடமாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

கும்ப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலை தொடங்குபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் இப்பொழுது ஆரம்பமாகிவிடும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel