தமிழ் செய்திகள்  /  Astrology  /  Transit Of Lord Surya In Pisces Is More Likely To Cause Danger To Certain Rasis

மீனத்தில் அதிரடி காட்டும் சூரியன்.. புரட்டி வெளுக்க போகும் சூரியன்.. சிக்கிக் கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2024 11:42 AM IST

Lord Surya: சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சில நேரங்களில் எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். சூரிய பகவானின் மீன ராசி பயணமானது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மார்ச் 16ஆம் தேதி என்று மீன ராசியில் சூரியன் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீன ராசியில் ஏற்கனவே புதன் பகவான் மற்றும் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றனர். தற்போது சூரியனும் அவர்களோடு ஒன்று சேர்ந்துள்ளார்.

சூரிய பகவான் உயர் பதவி ஆன்மா கண்ணியம் மரியாதை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சூரியனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சில நேரங்களில் எதிர்மறையான பலன்களையும் கொடுக்கும். சூரிய பகவானின் மீன ராசி பயணமானது சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும். அதிக கவனம் செலுத்த வேண்டும் வணிகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களோடு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் சண்டைகள் ஏற்படும். குடும்பத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த காரியத்திலும் திருப்தி அடைய மாட்டீர்கள். உங்களுடைய ஆசைகள் நிறைவேறாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வருமானத்தை எதிர்பார்த்து எதிலும் களத்தில் இறங்க வேண்டாம். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் காப்பாற்றும். உங்களுடைய திட்டம் குறித்து யாரிடமும் கூற வேண்டாம். மற்றவர்களிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

 

சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முடிவுகளை எடுக்கும் போது ஒன்றுக்கு மூன்று முறை யோசிப்பது நல்லது. பெற்றோருடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் வேலையை பாதிக்கக்கூடிய விஷயங்கள் உங்களை தேடி வரும். உயர் அலுவலர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

சூரியனின் சஞ்சாரம் உங்களது வாழ்க்கையை புரட்டிப் போடப் போகின்றது. மற்றவர்கள் பேச்சை கேட்டு எதிலும் இறங்க வேண்டாம். மனநிலைமையில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்களுக்காக போராடுவது நல்லது அல்ல. உடன் பிறந்தவர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகமாக கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது கடன் தொல்லைகள் உங்களைத் தேடி வரும். முடிந்தவரை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel