Guru Peyarchi Palangal 2024: மே 1 ம் தேதி குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரருக்கு யோகம் அடிக்கப் போவது உறுதி!
Guru Peyarchi 2024: இந்த ராசிக்காரர்களுக்கு விரயச் சனி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் ராசிக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கக் கூடிய குரு, மூன்றாம் இடத்திற்கு செல்கிறார். அவ்வாறு நடப்பது நல்லதா என்றால் இல்லை என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். சிறப்பான காலத்தை அது கொடுக்காது என்பது ஒரு கூற்று.

குரு பகவான் மே 1ம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இதனால், மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என பார்ப்போம் வாங்க.
காலச்சக்கரத்தின் 12வது ராசி மீனம். ஒரு மீன் மற்றொரு மீனை கடிப்பது போல் இருக்கும் ராசி எது என்றால் அது மீனம் தான். மீனம் சுக்ரத்தின் உச்சம். குரு ஆட்சி. சுக்ரன் உச்சத்தில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு எளிமையான வாழ்க்கை மீது நாட்டம் இருக்காது. மாறாக, அதிகம் செலவு செய்ய வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்.
அனைத்து அடிப்படை தேவைகளும் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ண கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு கார், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், ஏசி போன்றவற்றை வாங்கி வைக்க விரும்புவார்கள். பணம் இருக்கோ இல்லையோ இஎம்ஐயிலாவது வாங்கி வைத்துவிடுவார்கள்.
அவர்கள் சுக்ரம் உச்சம் அடைவதால் இயற்கையாகவே இப்படிதான் இருப்பார்கள்.
அதேபோல், மீன ராசிக்காரர்கள் நகையை இழந்து மீண்டிருப்பார்கள். இழந்துவிட்டேன் மீளவே இல்லை என்று இருப்பவர்களும் இருப்பார்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு விரயச் சனி நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் ராசிக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கக் கூடிய குரு, மூன்றாம் இடத்திற்கு செல்கிறார். அவ்வாறு நடப்பது நல்லதா என்றால் இல்லை என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். சிறப்பான காலத்தை அது கொடுக்காது என்பது ஒரு கூற்று. ஆனால், அவர்கள் போன இடத்தில் இருந்து பார்க்கிற இடம் என ஒன்று இருக்கிறது. அது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஏழாம் இடம், ஒன்பதாம் இடம், பதினோறாம் இடம் ஆகியவற்றை பார்க்கிறார்.
3ம் இடத்தில் குரு வந்தால் கூட உங்களால் சமாளிக்க முடியும். தந்தையாரின் உடல்நிலை சரியில்லை என்றால், அது சரியாகும். இரண்டாவது டிகிரி படிக்கிறீர்கள் என்றால், அது வெற்றிகரமாக நிறைவேறும்.
திருமணத்திற்கான காலம் வரும். இரண்டாவது குழந்தை கிடைக்கும்.
9ம் இடத்தை பார்ப்பதால், ப்ரமோஷன், அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரிந்து சென்ற நண்பர்கள் சேர்வார்கள். அஞ்சல் வழி கல்வி படிப்பவர்கள், படிப்பை முடிக்காமல் இருப்பவர்கள் இப்போது படிப்பை முடித்து விடுவீர்கள்.
வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.
அடுத்த கட்டத்தை நோக்கி கட்டாயம் நகர்வீர்கள். 3ம் இடத்தில் இருக்கும் குரு ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்-மனைவி வேலை நிமித்தமாக பிரிந்து செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டால் தாராளமாக அந்த முயற்சியை எடுக்கலாம். தற்போது உங்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
குரு பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கிறது. ஆனாலும், குரு பார்வை பட்டால் நல்லதே நடக்கும்.
நிச்சயமாக குரு பார்வை பட்டால் வளர்ச்சியை கொடுக்கும். குரு பார்வை கோடி தோஷ நிவர்த்தி. சுற்றுலா செல்லவும் மீனராசிக்காரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
மீன ராசிக்காரர்களுக்கு குருபெயர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், 3ம் இடத்திற்கு குருபகவான் வருவதால் கொஞ்சம் நிதானமாக நீங்கள் ஒவ்வொரு நகர்வையும் செய்வது அவசியம்.
பொறுப்புத்துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்