Mesham Rasi Weaknesses: ’அதீத ரிஸ்க்! இரக்க குணம்!’ மேஷம் ராசியில் பிறந்தவர்களின் பலவீனங்கள்!
Mesham Rasi Weaknesses: உங்களின் உதவும் இரக்க குணத்தை பலரும் முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதால், உதவி செய்யும் போது கவனம் தேவை. உதவி செய்வது தவறு அல்ல; ஆனால் உங்களிடம் நடித்து உதவிகளை பெறும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் மேஷம் ராசி முதல் ராசியாக உள்ளது. மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். இதனால் இவர்கள் வீரியமாகவும், தைரியமாகவும், வீரமாகவும் செயல்பட கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்பு, துணிச்சல், விடாமுயற்சி, சுயாதீன தன்மை, ஆர்வம், நேர்மை, கோபம் ஆகிய குணங்களை கொண்டு இருப்பார்கள். இவர்கள் எப்போது உற்சாகம் மிகுந்து இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
அதீத ரிஸ்க்
மேஷம் ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். சில சமயங்களில் அதுவே அவர்களுக்கு பலவீனம் ஆகவும் மாறிவிடும். அதீத தன்னம்பிக்கை இவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். மிக வேகமாக வளர வேண்டும் என்று நினைப்பதை விட நிதானமாக வளர வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பங்குச்சந்தை உள்ளிட்ட ரிஸ்க் மிகுந்த தொழில்களை செய்யும் போது படிப்படியாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு இருப்பது முக்கியம். அதே போல் உங்களை புகழ்பவர்களை நம்பவே கூடாது. அவர்கள்தான் உங்களுக்கு துரோகத்தை செய்பவர்களாக இருப்பார்கள். எனவே புகழ்ச்சிக்கு அடிமையாக கூடாது. ‘போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்’ என்ற பொன்மொழிப்படி நடப்பது நல்லது.
